குடியரசுத் தலைவர் செயலகம்
                
                
                
                
                
                    
                    
                        ஹோலி பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                24 MAR 2024 8:38PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; 
 
 "ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஹோலி ஒரு துடிப்பான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகையாகும், இது நம் வாழ்வில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. ஹோலியின் பல்வேறு வண்ணங்கள் நம் நாட்டின் பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன. இந்தப் பண்டிகை மக்களிடையே அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை ஊக்குவிக்கிறது. இந்த விழா நமது கலாச்சார பாரம்பரியத்தை வலுப்படுத்த நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
 
இந்த வண்ணங்களின் திருவிழா ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும், புதிய ஆர்வத்துடன் தேசத்தைக் கட்டமைப்பதில் பணியாற்ற நம் அனைவரையும் ஊக்குவிக்கட்டும்"
 
 
PKV/KRS
                
                
                
                
                
                (Release ID: 2016291)
                Visitor Counter : 159