சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெப்பநிலை அதிகரிப்பதால் கோடை மாதங்களில் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன

Posted On: 23 MAR 2024 8:11PM by PIB Chennai

கோடை மாதங்களில்  வெப்பநிலை அதிகரிக்கும் போது , மருத்துவமனைகளில் தீ விபத்து ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறும். இதைத் தடுக்க, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கூட்டு ஆலோசனையை வழங்கியுள்ளது, இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதில் முன்முயற்சி நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட விசயங்கள் தொடர்பாக  உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய  நெருக்கமாக  ஒத்துழைக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்              
தீ பாதுகாப்பு இணக்கத்தை மதிப்பிடுவதற்கு அனைத்து மருத்துவமனைகளிலும்   விரிவான தீ பாதுகாப்பு தணிக்கை / கள ஆய்வுகளை  நடத்த வேண்டும். தீயணைக்கும் அமைப்புகள்,  தீ எச்சரிக்கை அலாரம், தீ புகை கண்டுபிடிப்பான்கள், தீயணைப்பு கருவிகள் மற்றும் தீயணைப்பு லிஃப்ட்கள்  ஆகியவற்றின் இருப்பு மற்றும் முழுமையான செயல்பாட்டை  உறுதி செய்ய வேண்டும்
மருத்துவமனைகள் ஒழுங்குமுறைத் தேவைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் தீ தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டும். 
தீ பாதுகாப்பு இணக்கத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் விரிவான வழிமுறைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன, மேலும் அனைத்து அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளிலும் தகவலைப் பரப்புவதற்கு பரிந்துரைக்கின்றன.
  1 . மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார சேவைகளில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க பின்வரும் வழிமுறைகள்        மேற்கொள்ளப்பட வேண்டும்     
தீயணைப்பு கருவிகள், ஹைட்ரான்ட்கள் மற்றும் அலாரங்கள் போன்ற  தீயணைப்பு  உபகரணங்களை மருத்துவமனைகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் .  
அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுக்கும் பராமரிப்பு அட்டவணையை அமைக்கவும். தீயை அணைக்கும் கருவிகளின் மாதாந்திர சோதனைகள், தீ அலாரங்கள் மற்றும் ஹைட்ரான்ட்டுகளின் காலாண்டு சோதனைகள் மற்றும் தொடர்புடைய இந்திய தரநிலைகளின்படி அவற்றின் செயல்திறனைச் சான்றளிப்பதற்கான வருடாந்திர தொழில்முறை ஆய்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.
மருத்துவமனையின் மின் நுகர்வை மதிப்பிடுவதற்கு  ஆண்டுக்கு இருமுறை மின்  தணிக்கைகள் நடத்தப்பட வேண்டும்.
ஆக்ஸிஜன் தொட்டிகள் அல்லது குழாய் ஆக்ஸிஜன் உள்ள பகுதிகளில் , கடுமையான புகைபிடிக்காத கொள்கைகள் மற்றும் வெப்ப மூலங்களில் கட்டுப்பாடுகளை  செயல்படுத்த வேண்டும்.
அனைத்து மருத்துவமனை பகுதிகளிலும் தீ புகை கண்டுபிடிப்பான்கள் மற்றும் தீ எச்சரிக்கை அலாரங்கள் நிறுவப்பட்டிருப்பதை  உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக நோயாளி அறைகள், கூடங்கள் மற்றும் பொதுவான பகுதிகளில்  இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். 
இந்த முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை  உறுதி செய்வதற்காக  தொடர் ஆய்வுகளை நடத்துமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

 

AD/BR/KRS

 


(Release ID: 2016266) Visitor Counter : 110