பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோவில் அடிக்க ல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 19 FEB 2024 1:58PM by PIB Chennai

ஜெய் மா கைலா தேவி, ஜெய் மா கைலா தேவி, ஜெய் மா கைலா தேவி!

ஜெய் புத்தே பாபா கி, ஜெய் புத்தே பாபா கி!

பாரத் மாதா கீ ஜே, பாரத் மாதா கீ ஜே!

உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பூஜ்ய ஸ்ரீ அவ்தேஷானந்த் கிரி அவர்களே, கல்கி கோவில் தலைவர் அவர்களே, ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் அவர்களே, பூஜ்ய சுவாமி கைலாஷானந்த் பிரம்மச்சாரி அவர்களே, பூஜ்ய சத்குரு ஸ்ரீ ரிதேஷ்வர் அவர்களே, பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் மரியாதைக்குரிய துறவிகளே, எனதருமை பக்தியுள்ள சகோதர சகோதரிகளே!

இன்று, வணக்கத்திற்குரிய துறவிகளின் பக்தியுடனும், பொதுமக்களின் உணர்வுகளுடனும், மற்றொரு புனிதமான 'கோவில்' நிறுவப்படுகிறது. துறவிகள் மற்றும் ஆச்சாரியார்கள் முன்னிலையில் அற்புதமான கல்கி கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பைப் பெறுவது எனக்கு கிடைத்த பாக்கியமாகும். கல்கி கோவில் இந்திய நம்பிக்கையின் மற்றொரு பெரிய மையமாக உருவாகும் என்று நான் நம்புகிறேன். உலகெங்கும் உள்ள நாட்டு மக்களுக்கும், பக்தர்களுக்கும் எனது பலப்பல நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 18 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு இன்று இந்த வாய்ப்பு வந்துள்ளது என்று ஆச்சார்யா அவர்கள் இப்போது கூறினார். எப்படியிருந்தாலும், ஆச்சார்யா அவர்களே, எத்தனையோ நல்ல செயல்கள் உள்ளன, அவற்றை சிலர் எனக்காக மட்டுமே விட்டுச் சென்றுள்ளனர். எந்த நற்பணி எஞ்சியிருந்தாலும், எதிர்காலத்தில் மகான்கள் மற்றும் மக்களின் ஆசியுடன் அதை நிறைவேற்றுவோம்.

நண்பர்களே,

இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்த தினமும்கூட இந்த நாள் இன்னும் புனிதமானதாகவும் ஊக்கமளிப்பதாகவும் மாறுகிறது. இன்று நம் நாட்டில் நாம் காணும் கலாச்சார மறுமலர்ச்சிக்கான உத்வேகம், நமது அடையாளத்தின் மீது நாம் உணரும் பெருமிதம் மற்றும் நமது அடையாளத்தை நிறுவுவதில் நாம் காணும் நம்பிக்கை ஆகியவற்றை சத்ரபதி சிவாஜி மகாராஜிடமிருந்து பெறுகிறோம். இந்தத் தருணத்தில், சத்ரபதி சிவாஜி மகராஜின் பாதங்களில் நான் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்.  அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

நண்பர்களே,

இன்று, சம்பலில் இந்த நிகழ்வின் சாட்சியாக நாம் மாறியிருக்கும் இந்த வேளையில், பாரதத்தின் கலாச்சார மறுமலர்ச்சியில் இது மற்றொரு அற்புதமான தருணமாகும். கடந்த மாதம் 22-ம் தேதியன்று அயோத்தியில் 500 ஆண்டுகால காத்திருப்பு நிறைவேறியதை தேசம் கண்டது. ராமபிரானின் கும்பாபிஷேகத்தின் தெய்வீக அனுபவம் இன்னும் நம்மை ஆழமாக நெகிழ வைக்கிறது. இதற்கிடையில், நமது நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபுதாபியில் முதல் பிரம்மாண்டமான கோயில் திறக்கப்பட்டதையும் நாம் கண்டோம்.

சகோதர சகோதரிகளே,

நம் வாழ்நாளில் இதுபோன்ற ஆன்மீக அனுபவங்களையும், கலாச்சாரப் பெருமிதத்தையும் நாம் காணும்போது அதைவிட பெரிய பாக்கியம் என்ன இருக்க முடியும்? இந்த யுகத்தில், காசியில் விஸ்வநாதர் கோவிலில் மகிமை நம் கண் முன்னால் மலர்வதை நாம் காண்கிறோம். நண்பர்களே

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளன்று நான் வேறொரு விஷயத்தையும் கூறியிருந்தேன். ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் ஜனவரி 22 முதல் தொடங்கியுள்ளது. பகவான் ஸ்ரீராமர் ஆட்சி செய்தபோது, அதன் தாக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதேபோல், குழந்தை ராமர் கும்பாபிஷேகத்தின் மூலம், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு பாரதத்திற்கான ஒரு புதிய பயணம் தொடங்குகிறது.

நண்பர்களே,

பாரதம் தோல்வியிலிருந்து வெற்றியை மீட்டெடுத்த நாடாகும். பல நூறு ஆண்டுகளாக எண்ணற்ற படையெடுப்புகளை நாம் சந்தித்திருக்கிறோம். அது வேறு எந்த நாடாக இருந்தாலும், வேறு எந்த சமூகமாக இருந்தாலும், அது தொடர்ச்சியான படையெடுப்புகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும். ஆனாலும், நாம் விடாமுயற்சியுடன் இருந்தது மட்டுமல்லாமல், நாங்கள் இன்னும் வலுவாக எழுந்தோம். பல நூற்றாண்டுகளின் தியாகங்கள் இன்று பலன் அளித்து வருகின்றன.

நண்பர்களே,

எப்போதெல்லாம் பாரதம் ஒரு பெரிய தீர்மானத்தை எடுக்கிறதோ, அப்போதெல்லாம் தெய்வீக உணர்வு எப்படியோ வழிகாட்டுதலுக்காக நம்மிடையே வருகிறது. அதனால்தான் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், நமக்கு இவ்வளவு பெரிய நம்பிக்கையைத் தருகிறார்.

பாரத் மாதா கீ ஜே!

பாரத் மாதா கீ ஜே!

பாரத் மாதா கீ ஜே!

மிகவும் நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

----

ANU/PKV/IR/KPG/KV

 



(Release ID: 2015888) Visitor Counter : 33