புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மைக்கான 41 வது வழிகாட்டுதல் குழு பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் உப பொருட்களை பயன்படுத்துவது குறித்து விவாதித்தது
Posted On:
20 MAR 2024 12:38PM by PIB Chennai
மார்ச் 18 முதல் 22-ந்தேதி வரை புதுதில்லியில் நடைபெற்று வரும் பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் 41வது வழிகாட்டுதல் குழு கூட்டம், அதன் முறையான நடவடிக்கைகளை நேற்று தொடங்கியது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்கள், அதாவது மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகள் புதுதில்லியின் சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெறும் 41 வது வழிகாட்டுதல் குழு கூட்டத்தின் முறையான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல் நாளில், ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் துணைத் தலைவர் டாக்டர் நோ வான் ஹல்ஸ்ட் தனது தொடக்க உரையில், இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனைப் பாராட்டினார், மேலும் கூட்டாண்மை பிரதிநிதிகளுக்கு இந்தியா வழங்கிய விருந்தோம்பல் மற்றும் கனிவான வரவேற்பைப் பாராட்டினார்.
வரவேற்புரையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அஜய் யாதவ், பொருளாதாரத்தை கார்பன் நீக்கம் செய்ய பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இது தொடர்பாக கூட்டு நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஆஸ்திரியா, சிலி, பிரான்ஸ், ஐரோப்பிய ஆணையம், ஜப்பான், ஜெர்மனி, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் கூட்டத்தை நடத்தும் நாடான இந்தியாவின் பிரதிநிதிகள் வழிநடத்தல் குழு கூட்டத்தில் பங்கேற்றனர். பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் உப பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பான பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
***
PKV/KRS
(Release ID: 2015673)
Visitor Counter : 122