மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக புத்தொழில் கேந்திரம்: புத்தொழில் திருவிழாவின் பரந்த நிலப்பரப்பில் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு அதிகாரமளித்தல், வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் வெற்றியை உருவாக்குதல்

Posted On: 19 MAR 2024 3:32PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2024, மார்ச் 18 முதல் 20 வரை நடைபெறும்  புத்தொழில் திருவிழா 2024, நாட்டின் சிறப்புமிக்க புத்தொழில் சூழலை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கும் நிகழ்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 'பாரத் புதுமைக் கண்டுபிடிப்புகள்' என்ற மகத்தான கருப்பொருளுடன், புதுமைகளை ஊக்குவிப்பது, கட்டமைப்பை எளிதாக்குவது மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள புத்தொழில்கள், முதலீட்டாளர்கள், தொழில் காப்பகங்கள், மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அரங்கு தற்போது புதுமை மற்றும் தொழில்முனைவின் மையமாக உருவெடுத்துள்ளது. ஏனென்றால் 40-க்கும் மேற்பட்ட  புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் அதிநவீன கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக புத்தொழில் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜீஜ் விஜய், அத்தகைய ஒரு குழு விவாதத்தில் ஆழ்ந்த தொழில் நுட்பத்திற்கு நிதியளித்தல் குறித்து சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக புத்தொழில் மையம் ஒரு பிரத்யேக தொழில் காப்பக சிறப்பு வகுப்பையும் நடத்தியது. இது தொழில் காப்பகங்கள், புத்தொழில்களுக்கான வெற்றிக்கு அவசியமான விரிவான தலைப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது.

***

PKV/IR/RS/KRS


(Release ID: 2015577) Visitor Counter : 112