பாதுகாப்பு அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலை 16 -ல் அவசர தரையிறங்கும் வசதியை செயல்படுத்துதல்

Posted On: 19 MAR 2024 10:06AM by PIB Chennai

இந்திய விமானப்படையின் போர் மற்றும் போக்குவரத்து விமானங்கள், பாபட்லா மாவட்டத்தில் அடங்கியுள்ள தேசிய நெடுஞ்சாலை 16-ல் அவசரகாலத் தரையிறங்கும் வசதிக்கான நடவடிக்கைகள்  நேற்று மேற்கொள்ளப்பட்டன.  எஸ்யு -30 மற்றும் ஹாக் போர் விமானங்கள் செயல்பாட்டின் போது வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டன.  அதே நேரத்தில் ஏஎன் -32 மற்றும் டோர்னியர் போக்குவரத்து விமானங்கள் வெற்றிகரமாகத் தரையிறங்கியதுடன், பின்னர் அங்கிருந்து பறப்பட்டும் சென்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாவட்ட நிர்வாகம், மாநில காவல்துறை போன்ற சிவில் ஏஜென்சிகளுக்கும்  இந்திய விமானப்படைக்கும் இடையே மிகவும் முக்கியமான, பன்முக நடவடிக்கைகளை மேற்கொள்வதில்  உயர்மட்ட ஒருங்கிணைப்பு  மற்றும் புரிதல்கள்  இருப்பதை இந்தச் செயல்பாடு வெளிப்படுத்தியது.

முன்னதாக, அத்தகைய செயல்படுத்தல் 2022  டிசம்பர் 29 அன்று நடத்தப்பட்டது. 4.1 கி.மீ நீளமும் 33 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் விமான ஓடுதளம் இந்திய விமானப்படை வழங்கிய விவரக்குறிப்புகளின்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால்,  கட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் மற்ற விமான ஓடுபாதைகள் செயல்பட்டு வரும் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்த அவசரகால ஓடுபாதை  தீபகற்ப இந்தியாவில் அண்மையில் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

நெடுஞ்சாலை விமான ஓடுதளங்கள் தற்செயல் நிகழ்வுகளின் போது விமான நடவடிக்கைகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகின்றன. தொலைதூரப்  பகுதிகளில் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளின் போது இவை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகத் திகழ்கின்றன.

 ***

PKV/KV

 



(Release ID: 2015494) Visitor Counter : 79