பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அட்மிரல் ஆர்.எல். பெரேராவின் நூற்றாண்டு கொண்டாட்டம் டார்ஜிலிங்கில் நடைபெற்றது

Posted On: 17 MAR 2024 12:08PM by PIB Chennai

அட்மிரல் ஆர்.எல்.பெரேரா 1923 ஆம் ஆண்டு பிறந்து 1993ம் ஆண்டில் காலமானார்.  பரம் விஷிஸ்ட் சேவா மற்றும் அதி விஷிஸ்ட் சேவா (PVSM, AVSM) பதக்கங்களை அவர் பெற்றுள்ளார்.  அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக,  இந்திய கடற்படை மற்றும் டார்ஜிலிங் செயின்ட் ஜோசப் பள்ளி ஆகியவை இணைந்து 15 மார்ச் 2024 அன்று பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சிகளை நடத்தின. 

அட்மிரல் பெரேரா, 1979-ம் ஆண்டில் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றார். டார்ஜிலிங் செயின்ட் ஜோசப் பள்ளியில் அவர் 1932-37 காலகட்டத்தில் மாணவராக இருந்தார். அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் பள்ளியில் கால்பந்தாட்டப் போட்டி மற்றும் கட்டுரை எழுதும் போட்டிகளும் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் கடற்படை  அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடற்படை அதிகாரி கமாண்டர் அனுப் தாமஸ், அட்மிரல் பெரேராவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து பேசினார். 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.  இந்தியாவின் கடல்சார் வரலாறு மற்றும் கடற்படையில் உள்ள வாய்ப்புகள் குறித்து கடற்படை அதிகாரி கமாண்டர் குர்பீர் சிங் எடுத்துரைத்தார்.

***

ANU/AD/PLM/DL


(Release ID: 2015296) Visitor Counter : 87