ரெயில்வே அமைச்சகம்
2023-24-ம் நிதியாண்டில் சரக்கு வர்த்தகம், மொத்த வருவாய், இருப்புப் பாதை அமைத்தல் ஆகியவற்றில் இதுவரை இல்லாத சாதனையை இந்திய ரயில்வே பதிவு செய்துள்ளது
Posted On:
15 MAR 2024 1:03PM by PIB Chennai
2023-24-ம் நிதியாண்டில் சரக்கு வணிகம், மொத்த வருவாய், இருப்புப் பாதை அமைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய ரயில்வே வரலாற்றில் மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்யும் பாதையில் உள்ளது.
முதற்கட்ட தரவுகளின்படி, 2024, மார்ச் 15 அன்று 1500 மெட்ரிக் டன் சரக்கு கையாளுதலை இந்திய ரயில்வே கடந்துள்ளது. இதற்கு முன், 2022-23-ம் நிதியாண்டில் 1512 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டதே சாதனையாக இருந்தது.
இந்த நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் இன்றைய நிலவரப்படி ரூ.2.40 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி நிலவரப்படி, மொத்த வருவாய் ரூ.2.23 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் மொத்த செலவு ரூ.2.26 லட்சம் கோடியாக உள்ளது.
2023-24-ம் நிதியாண்டில் பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 648 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 52 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு 596 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்தனர்.
இந்த நிதியாண்டில் இன்றைய தேதியில் இந்திய ரயில்வே 5100 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் தடங்களை அமைத்துள்ளது. இந்த நிதியாண்டில், சராசரியாக ஒரு நாளைக்கு 14 கி.மீ. தொலைவிற்கு பாதைகள் அமைக்கப்படுகின்றன.
**************
PKV/KPG/KV
(Release ID: 2014859)
Visitor Counter : 105