சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-ம் தேதிக்கு முன் மற்ற வங்கி ஃபாஸ்டேக்-கிற்கு மாறுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
Posted On:
13 MAR 2024 2:16PM by PIB Chennai
தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்யவும், சுங்கச்சாவடிகளில் சிரமத்தைத் தவிர்க்கவும், பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-ம் தேதிக்கு முன்னர் மற்றொரு வங்கியால் வழங்கப்பட்ட புதிய ஃபாஸ்டேக்-கை வாங்கிப் பயன்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது அபராதம் அல்லது இரட்டை கட்டணங்களைத் தவிர்க்க உதவும்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-க்குப் பிறகு தங்களது கணக்கில் ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது. இருப்பினும், அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பிறகு, டோல் செலுத்த தங்களிடம் தற்போது இருக்கும் இருப்பைப் பயன்படுத்தலாம்.
பேடிஎம் ஃபாஸ்டக் (Paytm FASTag) தொடர்பான கூடுதல் சந்தேகங்கள் அல்லது உதவிகளுக்கு, பயனர்கள் வங்கிகளை அணுகலாம் அல்லது தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனமான ஐஹெச்எம்சிஎல்-லின் (IHMCL) இணையதளத்தில் கேள்வி பதில் பகுதியைப் பார்க்கலாம். நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்ய அனைத்து பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
*************
AD/PKV/PLM/KV
(Release ID: 2014156)
Visitor Counter : 134