பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்


தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விவாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தலைவர்கள் வரவேற்றனர்

பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்

प्रविष्टि तिथि: 12 MAR 2024 8:43PM by PIB Chennai

பிரிட்டிஷ்  பிரதமர் திரு ரிஷி சுனக்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இருதரப்பு விரிவான உத்திசார் கூட்டாண்மையைத் தொடர்ந்து வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டைத் தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பந்தோபஸ்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் 2030 செயல் திட்டத்தின் கீழ், ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர்.

பரஸ்பரம் பயனளிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் சாதகமாக மதிப்பிட்டனர்.

பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டதுடன், வரவிருக்கும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

***

PKV/RS/KV

 


(रिलीज़ आईडी: 2014064) आगंतुक पटल : 109
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam