பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவைக்கு திருமதி சுதா மூர்த்தி நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி

प्रविष्टि तिथि: 08 MAR 2024 2:13PM by PIB Chennai

திருமதி சுதா மூர்த்தி மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது:

"@SmtSudhaMurty ஜியை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகப்பணி, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதாவின் பங்களிப்பு அளப்பரியது என்பதுடன் ஊக்கமளிக்கக் கூடியதாகும். மாநிலங்களவையில் அவரது வருகை நமது 'பெண் சக்தி'க்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனுக்கு எடுத்துக்காட்டாகும். நாடாளுமன்ற பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்".

***

KASI/RS/KV

 


(रिलीज़ आईडी: 2012754) आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam