பிரதமர் அலுவலகம்
மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.100 குறைப்பு – பிரதமர் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2024 8:52AM by PIB Chennai
மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 வரை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும். குறிப்பாக, நமது பெண் சக்திக்கு இது பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ .100 குறைக்கும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். இது பெண்கள் சக்தியின் வாழ்க்கையை எளிதாக்குவதோடு, கோடிக்கணக்கான குடும்பங்களின் பொருளாதாரச் சுமையையும் குறைக்கும். இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவும், முழு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்."
"இன்று, மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையைக் கணிசமாகக் குறைக்கும். குறிப்பாக, நமது பெண் சக்திக்கு இது பயனளிக்கும்.
சமையல் எரிவாயுவை மிகவும் மலிவானதாக மாற்றுவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதி செய்வதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த நடவடிக்கை, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன் அவர்களுக்கு 'எளிதான வாழ்க்கையை’ ஏற்படுத்தித் தரும் எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளது.”
***
PKV/BR/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2012681)
வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam