இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மார்ச் 5 மற்றும் 6ம் தேதிகளில் தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவின் நிறைவு விழா நடைபெறுகிறது
Posted On:
04 MAR 2024 3:40PM by PIB Chennai
புதுதில்லி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மார்ச் 5ம் தேதி 2024ம் ஆண்டின் தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மார்ச் 6ம் தேதி தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இதனை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் விவகாரத்துறை அமைச்சகம் ஒருங்கிணைக்கிறது.
தேசத்தின் மாற்றத்திற்கான ஈடுபாடு மற்றும் அதிகாரத்துக்கான இளம் குரல்கள் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு தேசிய இளையோர் நாடாளுமன்றம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டின் தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழா நாடுமுழுவதும் 2024 பிப்ரவரி 9-ந் தேதி தொடங்கி மார்ச் 6 வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 785 மாவட்டங்களில் மூன்று கட்டங்களாக இளையோர் நாடாளுமன்றம் ஒருங்கிணைக்கப்பட்டது.
மாவட்ட இளையோர் நாடாளுமன்றம் 2024 பிப்ரவரி 9 முதல் 14ம் தேதி வரை ஒருங்கிணைக்கப்பட்டது. 2024ம் ஆண்டின் மாவட்ட இளையோர் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றோர் மாநில அளவில் 2024 பிப்ரவரி 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனர்.
மாநில அளவிலான போட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேர் புதுதில்லி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மார்ச் 5 மற்றும் 6ம் தேதி நடைபெறும் 2024ம் ஆண்டின் தேசிய இளையோர் நாடாளுமன்றத்தில் கூடுகின்றனர். மாநில அளவில் வென்ற 87 பேர்(முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பரிசு பெற்றோர்) தேசிய இளையோர் நாடாளுமன்றத்தில் பங்கேற்பர். இதில் 29 பேர்(மாநில அளவிலான இளையோர் நாடாளுமன்றத்தில் முதலிடம் பிடித்தவர்கள்) கொடுக்கப்பட்ட தலைப்புகளில் உரையாற்றுவார்கள். மீதம் உள்ள 58 பேர் தேசிய இளையோர் நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களாக பங்கேற்பர்.
***
(Release ID: 2011236)
PKV/BS/KRS
(Release ID: 2011300)
Visitor Counter : 108