கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Posted On:
03 MAR 2024 9:21AM by PIB Chennai
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், 'ஓஷன் கிரேஸ்' என்று பெயரிடப்பட்ட இழுவைக் கப்பல் மற்றும் பாராதீப் துறைமுகத்தின் நடமாடும் மருத்துவ மையத்தை (MMU) நேற்று (2024 மார்ச் 2) காணொலி மூலம் தொடங்கி வைத்தார். கொச்சி கப்பல் கட்டும் தளம், முதன்முதலாக இந்தியாவிலேயே உருவாக்கிய ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பல் ஓஷன் கிரேஸ் ஆகும். நடமாடும் மருத்துவ மையம் (MMU) என்பது பாராதீப் துறைமுகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் சேவையாகும்.
இந்த இழுவைக் கப்பல் முன்முயற்சி பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர்கள் திரு ஸ்ரீபத் நாயக், திரு சாந்தனு தாக்கூர், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு டி.கே. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், தற்சார்பு முயற்சிகளை நிறைவேற்ற மத்திய கப்பல் துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார். ரூ. 45 கோடி செலவில் கட்டப்பட்ட 'ஓஷன் கிரேஸ்' இழுவைக் கப்பல், இந்திய கடல்சார் பொறியியலின் சிறப்பு அம்சமாக உள்ளது என்று திரு சர்பானந்த சோனாவால் கூறினார்.
***
ANU/AD/PLM/DL
(Release ID: 2011080)
Visitor Counter : 96