நிதி அமைச்சகம்

மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி அமைப்புகளின் அமலாக்கத் தலைவர்களின் ஒருநாள் தேசிய மாநாட்டை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 03 MAR 2024 2:48PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) அமலாக்க செயல்முறையை வலுப்படுத்துவதில் ஒரு நடவடிக்கையாக, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை, அனைத்து மாநில மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமைப்புகளின் அமலாக்கத் தலைவர்களின் தேசிய மாநாட்டை 2024 மார்ச் 4 திங்கட்கிழமை புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இந்த ஒருநாள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரியும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பைத் தடுத்தல், தற்போதைய சவால்களை ஆராய்தல், மாநில மற்றும் மத்திய அமலாக்க அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் வெற்றிகரமான வழிமுறைகளை ஆய்வு செய்தல், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், மாநில மற்றும் மத்திய அமலாக்க அதிகாரிகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பை உருவாக்குதல் போன்றவை இந்த மாநாட்டில் முக்கிய அம்சங்களாக விவாதிக்கப்படும்.

***

ANU/AD/PLM/DL



(Release ID: 2011067) Visitor Counter : 110