மத்திய அமைச்சரவை

ஒரு கோடி வீடுகளில் கூரை சூரிய தகடு அமைப்பதற்கான பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 29 FEB 2024 3:38PM by PIB Chennai

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒரு கோடி வீடுகளில் கூரை சூரிய தகடு ரூ.75,021 கோடி மதிப்பீட்டில்  அமைப்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவதற்கு இந்தத் திட்டத்தை 2024 பிப்ரவரி 13 அன்று பிரதமர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

ஊரகப் பகுதிகளில் மேற்கூரை சூரிய சக்தியை ஏற்றுக்கொள்வதில் முன்மாதிரியாக செயல்படும் வகையில், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி சூரிய ஒளி கிராமம் உருவாக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களும் தங்கள் பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும் இணைப்பு அமைப்புகளை மேம்படுத்த ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் பயனடைய வேண்டும்.    

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஆர்வமுள்ள குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்களை உருவாக்குவதற்கும் ஒரு பெரிய பிரச்சாரத்தை அரசு தொடங்கியுள்ளது. திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற குடும்பங்கள் https://pmsuryaghar.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

*****

ANU/PKV/IR/AG/KR/DL



(Release ID: 2010252) Visitor Counter : 137