குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத்தலைவர் 2024, மார்ச் 1 அன்று கர்நாடக மாநிலம் தார்வாடுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
Posted On:
29 FEB 2024 1:13PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் 2024, மார்ச் 1-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் தார்வாடுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
தமது ஒரு நாள் பயணத்தின் போது தார்வாட் ஐஐடி நிரந்தர வளாகத்திற்கு செல்கிறார். அங்கு அவர் முக்கிய வாயில் கட்டடம், தரவு மற்றும் அறிவு மேம்பாட்டு மையம், மத்திய கற்றல் தியேட்டர் ஆகியவற்றைத் தொடங்கி வைக்கிறார். மேலும் இதே கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட உள்ள மேற்கூரை சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திரு ஜெக்தீப் தன்கர், தமது பயணத்தின் போது, எம்எம் ஜோஷி கண் மருத்துவ மையம் – ஐஸ்ரீ என்ற புதிய பன்னோக்கு கண் மருத்துவமனையின் திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
*****
(Release ID: 2010056)
PKV/BS/RS/KRS
(Release ID: 2010110)
Visitor Counter : 102