உள்துறை அமைச்சகம்
உள்நாட்டு பாதுகாப்பு குறித்து இந்தியா-அமெரிக்கா உயர் அதிகாரிகளிடையேயான பேச்சுகள் புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
28 FEB 2024 4:31PM by PIB Chennai
உள்நாட்டு பாதுகாப்பு குறித்து இந்தியா-அமெரிக்கா உயர் அதிகாரிகளிடையேயான பேச்சுகள் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இந்திய அரசின் சார்பில் உள்துறை செயலாளர் திரு அஜய் பல்லா, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் தற்காலிக துணைச் செயலாளர் திருமதி கிறிஸ்டி கனேகல்லோ ஆகியோர் தங்கள் நாட்டு குழுவினருக்கு தலைமை தாங்கினார்கள்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, பாதுகாப்பு முறை ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்தது, இந்தியா-அமெரிக்கா உத்திசார்ந்த கூட்டாண்மையின் முக்கிய தூணாக அமைந்தது. பயங்கரவாதம், தீவிரவாத வன்முறை, போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள், போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இருதரப்பு முயற்சிகளை வலுப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2009797
***
ANU/PKV/IR/AG /DL
(रिलीज़ आईडी: 2009893)
आगंतुक पटल : 147