மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் "நாட்டுக்கான எனது முதல் வாக்கு" பிரச்சாரத்திற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 27 FEB 2024 5:21PM by PIB Chennai

தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல் வி நிறுவனங்களில் 2024 பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை "நாட்டுக்கான எனது முதல் வாக்கு" பிரச்சாரத்திற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய கல்விதிறன் மேம்பாடுதொழில்முனைவோர் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். நமது இளைஞர்களும்முதல் முறை வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அவர் எடுத்துரைத்தார்.

பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தங்கள் வளாகங்களில் விரிவான வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்தவும்நமது இளைஞர் சக்தியை ஊக்குவிக்கவும்வாக்களிப்பதன் மதிப்பை அவர்களுக்கு வலியுறுத்தவும்அதிக பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கான தேர்தல் செயல்முறைகளில் பங்கேற்கவும் அவர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் இளம் வாக்காளர்களை வெளியே வந்து வாக்களிக்க ஊக்குவிப்பதும்நாட்டின் பெரிய நன்மைக்காக வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவிப்பதும் ஆகும். இந்த முயற்சி தேர்தல்களின் முக்கியத்துவத்தையும்உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் வாக்களிப்பதன் பெருமையையும் குறிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியில் பங்கேற்கும். பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / உயர் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்படும்அங்கு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பு நடவடிக்கைகள் அந்தந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும். மைகவ் தளத்தில் கள நேரடிப் போட்டிகள் மற்றும் ஆன்லைன் போட்டிகள் நடைபெறும்.

***

ANU/PKV/IR/AG/KRS



(Release ID: 2009599) Visitor Counter : 67