பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 FEB 2024 6:55PM by PIB Chennai

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்சில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"நெஞ்சை உலுக்குகிறது! உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளது: பிரதமர் @narendramodi"

*******

AD/BS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2008680) வருகையாளர் எண்ணிக்கை : 138