நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசியஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST) மற்றும் நல்லாட்சிக்கான ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை விதிகள் தொடர்பான திருத்தங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும்மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது

Posted On: 21 FEB 2024 12:20PM by PIB Chennai

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையின் இரண்டாவது திருத்த விதிமுறைகள் மற்றும் ஓய்வூதிய நிதி திருத்த விதிமுறைகள்  ஆகியவற்றை முறையே 05.02.2024 மற்றும் 09.02.2024 அன்று வெளியிட்டுள்ளது.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) அறக்கட்டளையின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தங்கள், அறங்காவலர்கள் தொடர்பான நிபந்தனைகள், அறங்காவலர் குழுவின் கூட்டங்களை நடத்துதல் மற்றும் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி நியமனம் தொடர்பான விதிகளை எளிதாக்குகின்றன.

நிறுவனங்கள் சட்டம்- 2013 மற்றும் ஓய்வூதிய நிதிகளின் விரிவான வெளிப்படுத்தல் ஆகியவற்றிற்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பது தொடர்பான விதிகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை  திருத்தங்கள் எளிமைப்படுத்துகின்றன.

மற்ற குறிப்பிடத்தக்க திருத்தங்கள் பின்வருமாறு:

  • ஓய்வூதிய நிதி மற்றும் ஓய்வூதிய நிதியத்தின் ஆவணங்களின் தெளிவு, 'பொருத்தமான மற்றும் சரியான நபர்' அளவுகோல்களுக்கு இணங்குதல்.
  • தணிக்கைக் குழு மற்றும் நியமனம், ஊதியக் குழு போன்ற ஓய்வூதிய நிதியைக் கொண்டு கூடுதல் வாரியக் குழுக்களை அமைத்தல்.
  • 12 மாத காலப்பகுதிக்குள் இந்த ஏற்பாடுகளுக்கு இணங்கி நடப்பதற்கு தற்போதுள்ள ஓய்வூதிய நிதியத்தின் தேவைப்பாடு மற்றும் பெயரில் 'ஓய்வூதிய நிதியம்' என்ற பெயரை உள்ளடக்குதல்.
  • ஓய்வூதிய நிதியத்தால் நிர்வகிக்கப்படும் திட்டங்களின் வருடாந்திர அறிக்கையில் இயக்குநர்களின் பொறுப்பு அறிக்கையும் அடங்கும்.
  • முக்கியப் பகுதிகளில் திருத்தங்கள் இணக்கத்தை எளிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. திருத்தப்பட்ட விதிமுறைகள் பற்றிய விரிவான தகவலுக்கு, PFRDA இணையதளத்தைப் பார்க்கலாம்:

என்பிஎஸ் அறக்கட்டளை இணையதளம்: https://www.pfrda.org.in/myauth/admin/showimg.cshtml?ID=2883 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம்: https://www.pfrda.org.in/myauth/admin/showimg.cshtml?ID=2891

***

(Release ID: 2007600)

ANU/PKV/PLM/RS/KRS


(Release ID: 2007620) Visitor Counter : 116