பிரதமர் அலுவலகம்
ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
மாபெரும் ஆன்மீக குருவை கௌரவிக்கும் வகையில் நினைவுத் தபால்தலை, நாணயத்தை வெளியிட்டார்
"சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரின் அன்பின் உறைவிடமாக ஆன்மீகத்தையும், தியானத்தையும் மக்களுக்குக் கிடைக்கச் செய்தார்"
"பக்தி என்பது நம் ஞானிகள் அளித்த மகத்தான தத்துவம். இது விரக்தி அல்ல, நம்பிக்கை, தன்னம்பிக்கை. பக்தி என்பது பயம் அல்ல, உற்சாகம்"
"நமது பக்தி மார்க்க துறவிகள் சுதந்திர இயக்கத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு சவாலான கட்டத்திலும் நாட்டை வழிநடத்துவதிலும் விலைமதிப்பற்ற பங்கைக் கொண்டிருந்தனர்"
“நாங்கள் நாட்டைக் ‘கடவுள்’ என்று கருதி, ‘கடவுள் நாடு' என்ற பார்வையுடன் நகர்கிறோம்”
"வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் மந்திரத்தில் பிரிவினைக்கு இடமில்லை"
"'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்பது இந்தியாவின் ஆன்மீக நம்பிக்கை"
"வங்காளம் என்பது ஆன்மீகம், அறிவாற்றலிலிருந்து பெறப்பட்ட நிலையான ஆற்றலின் மூலமாகும்"
Posted On:
08 FEB 2024 3:07PM by PIB Chennai
தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது நினைவாக நினைவுத் தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார். கௌடியா மடத்தின் நிறுவனர், ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதர் வைணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பல பெரிய துறவிகளின் வருகையால் பாரத மண்டபத்தின் பிரமாண்டம் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியதுடன், இந்தக் கட்டடம் பசுவேஸ்வராவின் 'அனுபவ மண்டபத்தை' அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவித்தார். பண்டைய இந்தியாவில் இது ஆன்மீக விவாதங்களின் மையமாக இருந்தது என்று அவர் கூறினார். ஸ்ரீல பிரபுபாதருக்கு மரியாதை செலுத்திய பிரதமர், அவரை கௌரவிக்கும் வகையில் அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை வெளியிட்டதற்காக அனைவரையும் பாராட்டினார்.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் பிரதிஷ்டையையடுத்து ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
"சைதன்ய மஹாபிரபு, கிருஷ்ணரின் அன்பின் உரைகல்லாக ஆன்மிகத்தையும், தியானத்தையும் மக்களுக்குக் கிடைக்கச் செய்தவர் ஸ்ரீல பிரபுபாதர்" என்று பிரதமர் கூறினார்.
ஸ்ரீல பிரபுபாதர் 10 வயதுக்கும் குறைவான சிறுவனாக இருந்தபோது கீதையை மனப்பாடம் செய்ததாகவும், சமஸ்கிருதம், இலக்கணம் மற்றும் வேதங்களில் அறிவைப் பெற்றதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஸ்ரீல பிரபுபாதர் வானியல் கணிதத்தில் சூரிய சித்தாந்த கிரந்தத்தை விவரித்ததாகவும், சித்தாந்த சரஸ்வதி பட்டம் பெற்றதாகவும் அவர் கூறினார். 24 வயதில் ஒரு சமஸ்கிருத பள்ளியையும் திறந்தார். ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் கலாச்சார மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு ஆன்மீகத் தலைவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைப் பிரதமர் மோடி பாராட்டினார்.
வளர்ச்சி, பாரம்பரியத்திற்கு இடையேயான நல்லிணக்கம் அமிர்த காலத்தின் 25 ஆண்டுகளுக்கும் தொடரும் என்று கூறினார். "துறவிகளின் ஆசீர்வாதத்துடன், நாம் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம். நமது ஆன்மீகம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்கு வழிவகுக்கும்" என்று கூறி திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
*************
(Release ID: 2003937)
ANU/SMB/IR/RS/KRS
(Release ID: 2005688)
Visitor Counter : 89
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam