சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அந்தஸ்து குறித்து கேள்வி எழுப்பி ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை
Posted On:
09 FEB 2024 3:21PM by PIB Chennai
ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஓபிசி அந்தஸ்து குறித்து கேள்வி எழுப்பும் வகையில், திரு ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.
இது குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 91 (ஏ) வட்டாரப் பட்டியலில் மோத் காஞ்சி சாதி உள்ளது என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மோத் காஞ்சி சாதியை இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மாநிலப் பட்டியலில் சேர்ப்பதற்கான அறிவிக்கையை குஜராத் அரசு 1994 ஜூலை 25 அன்று வெளியிட்டது.
பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் 15.11.1997 அன்று மத்திய அரசுக்கு குஜராத் மாநிலத்திற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மத்திய பட்டியலில் மோத் காஞ்சி இனத்தை சேர்க்க ஆலோசனை வழங்கி, அதற்கான அரசிதழ் அறிவிக்கை 27.10.1999 அன்று வெளியிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993-ன்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மத்திய பட்டியலில் எந்தவொரு சாதி / சமூகத்தையும் சேர்க்க வேண்டும் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் ஆலோசனை பொதுவாக மத்திய அரசைக் கட்டுப்படுத்தும். குஜராத் மாநிலத்திற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மத்திய பட்டியலில் மோத் காஞ்சி சாதி உட்பட 104 சாதிகள் / சமூகங்கள் உள்ளன.
ஓ.பி.சி.க்களின் மாநிலப் பட்டியலிலும், இதர பிற்படுத்தப்பட்டோரின் மத்தியப் பட்டியலிலும் மோத்-காஞ்சியை சேர்ப்பதற்கான மேற்கண்ட இரண்டு முடிவுகளும் எடுக்கப்பட்டபோது, திரு நரேந்திர மோடி சட்டமன்ற அல்லது நிர்வாகப் பதவியை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
***
(Release ID: 2004410)
ANU/SMB/BS/RR/KRS
(Release ID: 2004607)