பிரதமர் அலுவலகம்
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது: பிரதமர்
Posted On:
09 FEB 2024 1:16PM by PIB Chennai
பசுமைப் புரட்சியில் முக்கியப் பங்காற்றிய டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.
டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்குத் தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமின்றி, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வளத்தையும் உறுதி செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் நமது தேசத்திற்கு செய்த மகத்தான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருதினை இந்திய அரசு வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சவாலான காலங்களில் விவசாயத்தில் இந்தியா தன்னிறைவடைய உதவுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டார். ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும், பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பவராகவும் அவரது மதிப்புமிக்கப் பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம். டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்குத் தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமின்றி, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்துள்ளது. அவர் எனக்கு நெருக்கமாக தெரிந்த ஒருவர், அவரது நுண்ணறிவையும் உள்ளீடுகளையும் நான் எப்போதும் மதிக்கிறேன்”.
------
(Release ID: 2004328)
ANU/SMB/PKV/KPG/RR
(Release ID: 2004438)
Visitor Counter : 194
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam