குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

எம்.எஸ்.எம்.இ.களில் வேலை வாய்ப்புகள்

Posted On: 05 FEB 2024 3:39PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம், நாட்டின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வேளாண்மை சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட பண்ணை சாரா துறைகளில் புதிய அலகுகளை அமைப்பதில் தொழில்முனைவோருக்கு உதவுவதற்காகப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தைச்  செயல்படுத்தி வருகிறது.  பரவலாகப் பரவியுள்ள பாரம்பரியக் கைவினைஞர்கள் / கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலையற்ற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது இதன் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், பொதுப் பிரிவு பயனாளிகள் கிராமப்புறங்களில் திட்டச் செலவில் 25% மற்றும் நகர்ப்புறங்களில் 15% விளிம்புத் தொகை மானியத்தைப் பெறலாம். பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், வடகிழக்குப் பிராந்தியம், மலைப்பகுதி, எல்லைப் பகுதிகள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் போன்ற சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, விளிம்புத் தொகை மானியம் கிராமப்புறங்களில் 35% மற்றும் நகர்ப்புறங்களில் 25% ஆகும். மேலும், பொதுப் பிரிவைச் சேர்ந்த பயனாளிகள் திட்டச் செலவில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவைச் சேர்ந்த பயனாளிகள் திட்டச் செலவில் 5 சதவீதமும் பங்களிப்பு செய்கின்றனர். இத்திட்டத்தின் அதிகபட்ச செலவு உற்பத்தித் துறையில் ரூ.50 லட்சமும், சேவைத் துறையில் ரூ.20 லட்சமும் ஆகும்.

மேலும், சிறப்புப் பிரிவின் கீழ் உள்ள பயனாளிகளின் சொந்த பங்களிப்பு 05% மற்றும் பொதுப் பிரிவு பயனாளிகளுக்கு 10% ஆகும்.

2018-19 முதல், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் நன்கு செயல்படும் முத்ரா அலகுகளை மேம்படுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் 15% மானியத்துடன் ரூ.1 கோடி வரை 2-வது நிதி உதவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (வடகிழக்கு மற்றும் மலைப்பகுதிகளுக்கு 20%).

அனைத்துப் பிரிவினருக்கும் இரண்டாவது கடனுக்கான தகுதியான மானியம் திட்ட செலவில் 15% (வடகிழக்கு மற்றும் மலைப்பகுதி மாநிலங்களுக்கு 20%) ஆகும்.

மாநிலங்களவையில் இன்று குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா எழுத்துமூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2002572)

ANU/SMB/PKV/AG/KRS



(Release ID: 2002765) Visitor Counter : 48