நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அன்றைய-இன்றையப் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அரசு முடிவு

Posted On: 01 FEB 2024 12:45PM by PIB Chennai

2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், "2014-ம் ஆண்டில் எங்கள் அரசு பொறுப்பேற்றபோது, பொருளாதாரத்தைப் படிப்படியாக சரிசெய்யவும், நிர்வாக அமைப்புகளை ஒழுங்கமைப்பதற்குமான பொறுப்பு பெரிதானதாக இருந்தது. மக்களுக்கு நம்பிக்கையை அளிப்பதும், முதலீடுகளை ஈர்ப்பதும், மிகவும் தேவையான சீர்திருத்தங்களுக்கு ஆதரவை உருவாக்குவதும் காலத்தின் தேவையாக இருந்தது. 'நாடு -முதன்மையானது' என்ற நமது வலுவான நம்பிக்கையை அரசு வெற்றிகரமாக மேற்கொண்டது.

அன்றைய-இன்றைய பொருளாதாரம் குறித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர், "அந்த ஆண்டுகளின் நெருக்கடி சமாளிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரம் அனைத்துத்துறை வளர்ச்சியுடன் நிலையான வளர்ச்சிப் பாதையில் உறுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது" என்றார். "2014 வரை நாம் எங்கே இருந்தோம், இப்போது எங்கே இருக்கிறோம் என்பதைப் பார்ப்பதற்காக, அந்த ஆண்டுகளின் தவறான நிர்வாகத்திலிருந்து படிப்பினைகளைப் பெறும் நோக்கத்திற்காக" அரசு ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது என்றும் அவர் கூறினார்.

வளர்ச்சி, செயல்திறன், திறம்பட வழங்கல், 'மக்கள் நலன்' ஆகியவற்றின் முன்மாதிரியான சாதனை, வரவிருக்கும் பத்தாண்டுகளில் நல்ல நோக்கங்கள், உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் 'வளர்ச்சியைடந்த பாரதம்' என்ற இலக்கை அடைய அரசுக்கு நம்பிக்கையையும், மக்களின் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது" என்று மத்திய நிதியமைச்சர் திருமதி சீதாராமன் கூறினார்.

----

(Release ID: 2001164)

ANU/SMB/BS/KPG/KRS



(Release ID: 2001608) Visitor Counter : 117