பாதுகாப்பு அமைச்சகம்

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து 19 பணியாளர்கள் மற்றும் கப்பலை மீட்ட ஐஎன்எஸ் சுமித்ரா 2 வது வெற்றிகரமான கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது

Posted On: 30 JAN 2024 9:34AM by PIB Chennai

எஃப்.வி. இமான் மீதான கடற்கொள்ளை முயற்சியை முறியடித்த இந்தியக் கடற்படை கப்பல் சுமித்ரா, சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையில் மற்றொரு வெற்றிகரமான கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, மீன்பிடிக் கப்பல் அல் நயீமி மற்றும் 19 பாகிஸ்தானியர்களை சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்டுள்ளது.

சோமாலியா, ஏடன் வளைகுடாவின் கிழக்கே கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடற்படையின் உள்நாட்டுக் கடல் ரோந்துக் கப்பலான .என்.எஸ். சுமித்ரா நிறுத்தப்பட்டது. 2024,  ஜனவரி  28 அன்று ஈரானியக் கொடியுடன் கூடிய இமான் என்ற மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டதாகவும், கப்பலில் இருந்த குழுவினரை பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்ததாகவும் ஒரு செய்தி, எஃப்.வி .என்.எஸ் சுமித்ரா கப்பலால் இடைமறித்துக் கேட்கப்பட்டது.   இதனைத் தொடர்ந்து, கப்பல் மற்றும் 17 ஈரான் நாட்டினர் 2024, ஜனவரி 29 அதிகாலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எஃப்.வி.இமான் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு போக்குவரத்துக்காக விடுவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கடற்கொள்ளையர்கள் மற்றும் குழுவினரால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 19 பாகிஸ்தானியர்கள் அடங்கிய  மற்றொரு ஈரானிய கொடி பொறிக்கப்பட்ட மீன்பிடிக் கப்பலான அல் நயீமியை கண்டுபிடித்து இடைமறித்து .என்.எஸ் சுமித்ரா மீண்டும் நடவடிக்கை எடுத்தது. 2024, ஜனவரி 29, அன்று குழுவினரையும் கப்பலையும் பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர். சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட மாலுமிகளுக்கு உடல் மற்றும் மனரீதியாக பரிசோதனை செய்யும் பணியும்  மேற்கொள்ளப்பட்டது.

.என்.எஸ் சுமித்ரா, 36 மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில், விரைவான, இடைவிடாத முயற்சிகளின் மூலம், கொச்சிக்கு மேற்கே சுமார் 850 கடல் மைல் தொலைவில் தெற்கு அரேபியக் கடலில் 36 பணியாளர்களுடன் (17 ஈரானியர்கள் மற்றும் 19 பாகிஸ்தானியர்கள்) கடத்தப்பட்ட இரண்டு மீன்பிடிக் கப்பல்களை மீட்டுள்ளது.

கடலில் உள்ள அனைத்து  நாடுகளின் கடற்படையினர் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்துவிதமான  கடல் அச்சுறுத்தல்களுக்கும் எதிராக செயல்படுவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியக் கடற்படை மீண்டும் நிரூபித்துள்ளது.

***

(Release ID: 2000473)

ANU/SMB/BS/KPG/RR



(Release ID: 2000606) Visitor Counter : 113