ஆயுஷ்
மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் புவனேஸ்வரில் அதிநவீன 'ஆயுஷ் தீக்ஷா' மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்
Posted On:
20 JAN 2024 3:54PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று புதுதில்லியில் ஆயுஷ் தொழில் வல்லுநர்களின் மனிதவள மேம்பாட்டுக்கான முதலாவது மையமான 'ஆயுஷ் தீக்ஷா'வுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த அதிநவீன மையம் புவனேஸ்வரில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்திற்குள் உருவாக்கப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. சர்பானந்த சோனோவால், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுஷ் இயக்கம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும், நவீன மருத்துவ முறையுடன் அதிகாரமளிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவ முறையும் பயன்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார். ஆயுஷ் தீக்ஷா மையத்தின் பயணத்தை நாம் இன்று இங்கு தொடங்கியுள்ள நிலையில், இந்த மையம் ஆயுஷ் தொழில் வல்லுநர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், நாட்டு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த நோயாளிகள் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் என்று அவர் கூறினார். சக்திவாய்ந்த ஆயுஷ் இயக்கத்திற்கும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை அனுபவத்தை நோக்கிய உலகளாவிய இயக்கத்திற்கான அதன் முயற்சிக்கும் இது ஒரு ஊக்கியாக நிரூபிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
"பிரதமர் திரு நரேந்திர மோடியின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், ஆயுஷ் இயக்கம் அதன் வலிமையை மீண்டும் பெற்றுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கான இயக்கத்தை நோக்கி யோகா எவ்வாறு உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அறிவோம். இந்தியாவின் பிற பாரம்பரிய மருந்துகளை செயல்படுத்துவதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் கவனம் செலுத்தும் அணுகுமுறையுடன், ஸ்வஸ்தா பாரத் குறித்த பிரதமரின் தொலைநோக்கு பார்வை எட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறை நாட்டு மக்களுக்கு ஒரு வரமாக நிரூபிக்கும், ஏனெனில் அவர்கள் தங்கள் நோய்களை குணப்படுத்துவதற்கும், அவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை வளப்படுத்துவதற்கும் நகர முடியும்’’ என்று அவர் கூறினார்.
திறன் மேம்பாடு, மனித வளத்தை வலுப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்குதல், வருவாயை உருவாக்கும் நோக்கத்துடன் சுய-நிலைத்தன்மையை அடைதல் ஆகியவற்றிற்காக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், ஆயுஷ் நிபுணர்களுக்கு, குறிப்பாக ஆயுர்வேதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நிறுவனம் பயிற்சித் திட்டங்களை வழங்கும். ஆயுஷ் தீட்ஷா மையம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு ஆடிட்டோரியங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய 40 நவீன அறைகள், வி.ஐ.பி.க்களுக்கான அறைகள், இயற்கை நூலகத்திற்கான பிரத்யேக இடம், கலந்துரையாடல் அறைகள், மாடுலர் சமையலறை, ஓய்வறை உள்ளிட்ட அதிநவீன வசதிகளை இது கொண்டிருக்கும்.
இந்த நிகழ்ச்சியில் புவனேஸ்வர் மக்களவை உறுப்பினர் அபராஜிதா சாரங்கி, ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் ( சி.சி.ஆர்.ஏ.எஸ்) தலைமை இயக்குநர் பேராசிரியர் வைத்யா ரபிநாராயண் ஆச்சார்யா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் ஆயுஷ் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். புவனேஸ்வரில் உள்ள சிஏஆர்ஐ என்பது இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் கீழ் இயங்கும் ஒரு அலகு ஆகும். ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சியை அறிவியல் அடிப்படையில் மேம்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் இந்த முன்னோடி முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
************
(Release ID: 1998390)
Visitor Counter : 109