தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் கதையைச் சொல்கிறது அயோத்தி

Posted On: 21 JAN 2024 3:00PM by PIB Chennai

பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய அரசு
சென்னை

Ayodhya Tells a Story of Ek Bharat Shreshtha Bharat, One Brick at a Time

ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் கதையைச் சொல்கிறது அயோத்தி

புதுதில்லி, ஜனவரி 21, 2024

காஷ்மீரின் பனி மூடிய சிகரங்கள் முதல் கன்னியாகுமரியில் சூரிய ஒளியில் நனைந்த கடற்கரைகள் வரை, ராமரின் பெயர் இந்தியா முழுவதும் பக்தியுடன் எதிரொலிக்கிறது. இப்போது, இந்தப் பக்தி அயோத்தியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோயிலின் வடிவத்தில் ஒரு உறுதியான வடிவத்தை எடுத்துள்ளது. கம்பீரமான இந்தக் கோயில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பக்தியின் அடையாளமாக  உறுதியுடன் நிற்கிறது. இது பிரமாண்டத்துடன் மட்டுமல்லாமல் மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து உருவாக்கப்பட்டதாகவும் உள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' முன்முயற்சி இந்த கருத்தை ஆழமாக எதிரொலிக்கிறது. மாநில எல்லைகளைத் தாண்டி, ஒரு கோயிலுக்கான கட்டுமானப் பயணத்தில் தேசத்தை இது ஒன்றிணைக்கிறது. 

 

ராஜஸ்தானின் மக்ரானா பளிங்குக் கல்லால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கோயிலின் மையப்பகுதி கம்பீரமாக நிற்கிறது. கர்நாடகாவின் சார்மௌதி மணற்கல், ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூரிலிருந்து இளஞ்சிவப்பு மணற்கல் நுழைவு வாயிலின் கம்பீரமான உருவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

கம்பீரமான 2100 கிலோ அஷ்டதத்து மணி குஜராத் படைப்பாகும்.  அகில இந்திய தர்பார் சமாஜத்தால் வடிவமைக்கப்பட்ட 700 கிலோ ரதத்தையும் குஜராத் வழங்குகிறது. ராமர் சிலைக்கு பயன்படுத்தப்படும் கருப்பு கல் கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்திலிருந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் கலை வண்ணத்துடன் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மரக் கதவுகள் தெய்வீக சாம்ராஜ்யத்தின் நுழைவாயில்களாகத் நிற்கின்றன.

 

கோவிலில் பயன்படுத்தப்படும் வெண்கல பயன்பாடுகள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவை.  மெருகூட்டப்பட்ட தேக்கு மரங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. ராமர் கோயிலின் கதை வெறுமனே பொருட்கள் மற்றும் புவியியல் தோற்றம் பற்றியது மட்டுமல்ல. இந்த புனிதமான முயற்சியில் இதயங்கள், ஆன்மாக்கள் இணைந்துள்ளன. திறன்களை வெளிப்படுத்தியுள்ள  ஆயிரக்கணக்கான திறமையான கைவினைஞர்களின் பணிகளுக்கும் இது சான்றாகும்.

 

ராமர் கோவில் என்பது அயோத்தியில் உள்ள அடையாளச் சின்னம் மட்டுமல்ல. நம்பிக்கையை ஒன்றிணைக்கும் சக்திக்கு இது ஒரு சான்று. ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு செதுக்கலும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு துணியும் புவியியல் எல்லைகளைக் கடந்து, ஒரு கூட்டு ஆன்மீகப் பயணத்தில் இதயங்களை ஒன்றிணைத்து, அவை 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற கதையைச் சொல்கின்றன.

 

(Release ID – 1998342)

 

ANU/PKV/PLM/KRS

 

 

(Release ID – 1998342)

 

ANU/PKV/PLM/KRS



(Release ID: 1998365) Visitor Counter : 131