உள்துறை அமைச்சகம்

அசாம் மாநிலம் தேஜ்பூரில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 13-வது பாவோ மகாசபா மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 20 JAN 2024 6:37PM by PIB Chennai

அசாம் மாநிலம் தேஜ்பூரில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 13-வது பாவோ மகாசபா மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா உரையாற்றினார்.

அமித் ஷா தனது உரையில், இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட நாடு என்றும், பாரம்பரிய சனாதன தர்மத்துடன் பாத்தோ மதமும் வளர்ந்துள்ளது என்றும், இது இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாகும் என்றும் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் புதிய கண்ணோட்டம் மற்றும் முயற்சிகள் காரணமாக, வடகிழக்கில் போடோலாந்து பிரச்சினை தீர்க்கப்பட்டது என்றும், இன்று இந்தப் பகுதி வன்முறைப் பாதையைக் கைவிட்டு வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என்றும் கூறினார்.

1962 ஆம் ஆண்டில் குவஹாத்தியில் துலாராய் பாத்தோ கௌத்தம் நிறுவப்பட்டது என்றும், அதன் பின்னர் அது போடோ சமூகம் மற்றும் பாத்தோ மதத்திற்காக பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். போடோ சமூகத்தின் வாழ்க்கை முறையில் பாத்தோ மதத்தின் நடைமுறை மற்றும் விஞ்ஞான பகுப்பாய்வு பிரதிபலிக்கும் வகையில் இந்த மகாசபை பணியாற்றியுள்ளது என்று திரு ஷா கூறினார். மாக் மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை பாத்தோ பூஜைக்காக அசாம் அரசு விடுமுறை அறிவித்துள்ளது என்று அவர் கூறினார்.

முழு உலகத்தின் அமைதிக்காக, குறிப்பாக நமது வடகிழக்கு பிராந்தியத்தின் அமைதிக்காக, பாவோ மகாசபாவின் ஆன்மீக தொலைநோக்கு அதாவது தர்மம், அகிம்சை, அமைதி, மன்னிப்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றின் மூலம் பிரார்த்தனை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பாத்தோ மதத்தின் பொருளை அறிந்தவர்களுக்கு மட்டுமே பாத்தோ (Bathou )சமூகத்தைப் பற்றி அறிய முடியும் என்று அவர் கூறினார். பா(Ba) என்றால் ஐந்து என்றும் தோ (thou) என்றால் ஆழம் என்றும் அவர் கூறினார், அதாவது பஞ்ச பூதங்களின் அறிவியல் மற்றும் அவற்றின் ஆழமான ரகசியங்களைப் புரிந்து கொள்ளும் செயல்முறையாகும்.

போடோ சமூகத்தின் பாத்தோ மதத்தின் அடிப்படைக் கோட்பாடு ஐந்து கூறுகளின் ஒற்றுமை செய்தியை வழங்குவதாகும் என்று அவர் கூறினார். பாத்தோ மதத்தின் தத்துவத்தின்படி, போராய் பாத்தே பிரபஞ்சத்தில் ஊடுருவியுள்ளது என்று அவர் கூறினார்.

பஞ்ச பூதங்களின் தத்துவம் இயற்கை வழிபாட்டின் தத்துவம் என்றும், பாத்தோ மதத்தின் கொடியும் இதை பிரதிபலிக்கிறது என்றும் திரு ஷா கூறினார். பாத்கொடி மற்றும் மதம் ஆகிய இரண்டும் பஞ்ச பூதங்களை வழிபடும் செய்தியை அளிக்கின்றன என்று திரு ஷா கூறினார்.

பாத்தோயிசத்தின் ஐந்து தார்மீக செய்திகள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் உலகிற்கும் வழிகாட்டுதலை வழங்குகின்றன என்று திரு அமித் ஷா கூறினார். புனித அனுபவம், புனித பயிற்சி, இரக்கம், உண்மை மற்றும் வெறுப்பைத் துறத்தல் ஆகிய இந்த ஐந்து அடிப்படை செய்திகளின் வழியில் பாத்தோ மதம் முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்திய அரசும், அசாம் அரசும் அனைத்து மதங்களையும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன என்று அவர் கூறினார். எங்கள் நம்பிக்கை அமைப்புகளின்படி, இயற்கையை விட பெரியது எதுவும் இல்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இயற்கை வழிபாட்டில் கவனம் செலுத்தும் நமது மதங்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் எந்த வாய்ப்பையும் விட்டுவிடாது, குறிப்பாக வடகிழக்கில். அனைத்து மதங்களையும் பாதுகாக்க என்னென்ன தேவையோ அதை நிச்சயம் செய்வோம் என்றார்.

போடோ இயக்கத்திற்கு நீண்ட வரலாறு இருப்பதாகவும், போடோ மக்கள் தங்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற நிறைய போராடியதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பி அதிகாரத்தை அனுபவிப்பதே முந்தைய அரசுகளின் கொள்கையாக இருந்தது என்றும், இந்த கொள்கையின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர் என்றும் அவர் கூறினார். தற்போது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், போடோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், இன்று முழு போடோலாந்திலும் அமைதி மற்றும் நல்லிணக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் போடோலாந்து ஒரு வன்முறை சம்பவத்தை கூட சந்திக்கவில்லை என்றும், போடோலாந்து தற்போது முன்னேற்றப் பாதையில் உள்ளது என்றும் திரு ஷா கூறினார். இங்கு வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார். ஒட்டுமொத்த வடகிழக்கிலும் அமைதியை வளர்த்து நிலைநாட்டும் பிரதமர் மோடியின் இயக்கம் இன்று வெற்றி பெற்றுள்ளது என்று உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா குறிப்பிட்டார்.

*****

ANU/AD/BS/DL



(Release ID: 1998255) Visitor Counter : 90