ரெயில்வே அமைச்சகம்

597 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக மின் தூக்கி அல்லது நகரும் மின்படிகள் அமைக்கப்பட்டுள்ளது

Posted On: 17 JAN 2024 4:06PM by PIB Chennai

மத்திய அரசின் அணுகக்கூடிய இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களையும் ரயில்களையும் மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடியதாக மாற்ற இந்திய ரயில்வே உறுதிபூண்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது ரயில் நிலையங்களில் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்லவும், முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை எளிதாக அணுகவும், நடமாட்டத்தை எளிதாக்கவும் ‘அணுகக்கூடிய இந்தியா இயக்கத்தின்' ஒரு பகுதியாக மின்தூக்கி, நகரும் மின்படிகள் அமைக்கப்படுகின்றன.

 

மொத்தம் 597 ரயில் நிலையங்களில் மின்தூக்கி, நகரும் மின்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 143 நகரும் மின்படிகள், அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 1,144 நகரும் மின்படிகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் 372 ரயில் நிலையங்களில் மொத்தம் 1,287 நகரும் மின்படிகள் உள்ளன.

 

2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 97 மின்தூக்கிகள், அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 1,195 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டன.  இதன் மூலம் 497 ரயில் நிலையங்களில் மொத்தம் 1,292  மின்தூக்கிகள் உள்ளன.

 

----

(Release ID: 1996938)

 

ANU/SMB/IR/KPG/KRS



(Release ID: 1997007) Visitor Counter : 83