ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'பாரத் கெளரவ்' ரயில்கள் 2023-ம் ஆண்டில் 172 பயணங்கள் மூலம் 96,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது

Posted On: 16 JAN 2024 2:23PM by PIB Chennai

'பாரத் கெளரவ்' சுற்றுலா ரயில்கள்  என்ற பெயரில் சுற்றுலா ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்தச் சுற்றுலா ரயில்கள் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், அற்புதமான வரலாற்று இடங்களை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 2023-ம் ஆண்டில், 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 96,491 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. இதற்காக  172 பயணங்கள் நடைபெற்றன. இந்த ரயில்கள் திரு ராம் - ஜானகி யாத்திரை: அயோத்தி முதல் ஜனக்பூர் வரை. ஸ்ரீ ஜகந்நாதர் யாத்திரை; "கார்வி குஜராத்" சுற்றுப்பயணம்; அம்பேத்கர் வளாகம்,  வடகிழக்குப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயண ரயில்கள் இயக்கப்பட்டன. .

இதில் சுற்றுலா, விடுதிகளில் தங்குதல், சுற்றுலா வழிகாட்டிகள், உணவு, பயணக் காப்பீடு போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு  https://www.irctctourism.com/bharatgaurav என்ற இணையதளத்தைக் காணவும்

----

ANU/SMB/IR/KPG/KV


(Release ID: 1996636) Visitor Counter : 132