வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை ஆய்வு விருதுகள் 2023 வழங்கப்பட்டன

Posted On: 11 JAN 2024 3:34PM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்  ஏற்பாடு செய்த 2023 ஆம் ஆண்டிற்கான தூய்மை ஆய்வு விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். தூய்மையான நகரங்கள், தூய்மையான ராணுவக்குடியிருப்பு, நகர தூய்மைப்பணியாளர்கள் குடியிருப்பு, கங்கா நகரங்கள், சிறப்பாகச் செயல்படும் மாநிலம் ஆகிய பிரிவுகளின் கீழ் விருது பெற்ற 13 பேர் பாராட்டப்பட்டனர்.  இந்த ஆண்டு தூய்மையான நகரத்திற்கான முதல் விருதை துறைமுக நகரமான சூரத், 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்த இந்தூருடன் இணைந்து பெற்றது. ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில், சஸ்வத், பதான்,  லோனாவாலா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் ராணுவக் குடியிருப்பு வாரியம் தூய்மையான ராணுவக் குடியிருப்பு வாரியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூய்மையான கங்கை நகரங்களில் வாரணாசி, பிரயாக்ராஜ் ஆகியவை முதல் இரண்டு விருதுகளைப் வென்றுள்ளன. சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களுக்கான முதல் மூன்று விருதுகளை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் வென்றன. மொத்தம் 110 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தூய்மை நகரங்கள் 2023 தகவல் பலகையை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தூய்மை நகரங்கள் நடவடிக்கையில் அனைவரும் பங்களிப்பது முக்கிய முன்னேற்றம் என்று தெரிவித்தார். தூய்மை விருதுகளைப் பெற்றுள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களின் செயல்திறனை அவர் பாராட்டினார்.

-----

ANU/PKV/IR/KPG/KV

 

 

 

 




(Release ID: 1995223) Visitor Counter : 232