ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக மையங்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் குறித்த தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை, கூட்டுறவு அமைச்சர் திரு. அமித் ஷா, மத்திய ரசாயனங்கள், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் உரையாற்றினார்கள்

Posted On: 08 JAN 2024 2:29PM by PIB Chennai

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக மையங்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் குறித்த தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் திரு. அமித் ஷா, மத்திய ரசாயனங்கள், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் இன்று உரையாற்றினார்கள். மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கூட்டுறவு அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட முக்கிய முன்முயற்சிகள் மற்றும் இதுவரை அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த "ஒருங்கிணைந்த செழுமை" என்ற குறிக்கோளுடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டுறவு அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய மாதிரி துணை விதிகளின்படி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நோக்கம் கீழ்மட்ட அளவில் வேளாண் கடன்களைக் கையாளும் அவற்றின் அசல் செயல்பாட்டைத் தாண்டி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மருந்தகங்களை திறப்பது போன்ற பல வழிகளை அணுக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இப்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

"மக்கள் மருந்தக மையங்களைத் திறக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுமதிக்கும் முடிவின் நன்மைகள் கூட்டுறவு சங்கங்களால் அணுகப்படுவது மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும்" என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார்.

கடந்த 9 ஆண்டுகளில் மக்கள் மருந்தக மையங்கள் மூலம் சுமார் ரூ.26,000 கோடி ஏழை மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த மையங்களில் 50-90% வரை சந்தை விலையை விட குறைவாக ஜெனரிக் மருந்துகள் கிடைக்கின்றன.

ஆயுஷ்மான் பாரத் முன்முயற்சி, இந்திரதனுஷ் இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், டிஜிட்டல் சுகாதாரம், மலேரியா ஒழிப்பு இயக்கம், காசநோய் இல்லாத பரவும் முன்முயற்சி போன்ற மத்திய அரசின் பிற முக்கிய முன்முயற்சிகளையும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் டாக்டர் மன்சுக் மாண்டவியா, "முதல் கட்டமாக, 2,000 மக்கள் மருந்தக மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். நாட்டில் மக்கள் மருந்தக மையங்களைத் திறக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நிறுவனத்திடமிருந்து 2,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு மருந்துத் துறை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அவற்றில் 500 ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

"தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் மக்கள் மருந்தக மையங்களைத் திறப்பது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை ஒரு கூட்டுறவு அமைப்பாக வலுப்படுத்துவதோடு, நாட்டில் தரமான மற்றும் மலிவு விலையில் மருந்துகளின் வரம்பை விரிவுபடுத்தும்" என்று அவர் கூறினார்.

***

ANU/AD/IR/RR/KV



(Release ID: 1994196) Visitor Counter : 105