சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு அரிவாள் செல் நோய் பரிசோதனை - முக்கிய மைல் கல்லைக் கடந்தது

प्रविष्टि तिथि: 02 JAN 2024 2:50PM by PIB Chennai

தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அரிவாள் செல் நோய் பரிசோதனை செய்து சுகாதார அமைச்சகம் ஒரு முக்கிய மைல் கல்லைக் கடந்துள்ளது.

 

இந்த இயக்கம் 3 ஆண்டுகளில் 7 கோடி மக்களை பரிசோதிக்க முயற்சிக்கிறது. அரிவாள் செல் நோய் என்பது ஒரு மரபணு ரத்த சோகை நோயாகும். இந்நோய் பாதிக்கப்பட்ட நோயாளியின் முழு வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்நோய் பெரும்பாலும் பழங்குடியின மக்களிடம் காணப்படுகிறது. எனினும், பழங்குடியினர் அல்லாதவர்களையும் இந்நோய் பாதிக்கிறது. தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தை பிரதமர்  2023 ஜூலை 1 அன்று மத்தியப் பிரதேசத்தின் ஷாடோலில் தொடங்கி வைத்தார்.

 

இந்தியாவின் அனைத்து பழங்குடியினர் மற்றும் பிற அதிக பரவல் பகுதிகளில் அரிவாள் உயிரணு ரத்த சோகையைப் பரிசோதித்தல், தடுத்தல் என இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, அசாம், உத்தரப்பிரதேசம், கேரளா, பீகார், உத்தராகண்ட் ஆகிய 17 மாநிலங்களில் அரிவாள் செல் ரத்த சோகைப் பாதிப்பு அதிகம் உள்ள 278 மாவட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

=====

(Release ID: 1992340)

ANU/PKV/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1992437) आगंतुक पटल : 270
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu