நிதி அமைச்சகம்

2023-ல் நிதி அமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் சாதனைகள்

Posted On: 27 DEC 2023 3:31PM by PIB Chennai

2023-ல் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை, மதிப்பு உருவாக்கம், பங்குகள் விற்பனை, தொடர்ச்சியான நிதித் திட்டமிடல் ஆகியவற்றில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் மதிப்பு உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது 2023-ன் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருந்தது. 2021 ஜனவரியில் புதிய பொதுத்துறை நிறுவனக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பொதுத்துறை நிறுவனங்களின் தேசிய பங்குச் சந்தை மற்றும் பம்பாய் பங்குச் சந்தை குறியீடுகளின் அளவு அபரிமிதமாக இருந்தது. இதனால் 2023 நவம்பர் வரை இவற்றின் லாபப் பங்கு முறையே 160.49 சதவீதமாகவும், 128.66 சதவீதமாகவும் இருந்தது.

தொடக்கக்கால பொதுப் பங்குத் தேவைகளின் அடிப்படையில் இந்தத்துறை இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கான முதலாவது பொதுப்பங்குகளை வெற்றிகரமாக வெளியிட்டது.

பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வைத்திருக்கும் பங்குகளை விற்பது தீவிரமாகத் தொடர்ந்தது.  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், நிலக்கரி இந்தியா நிறுவனம், ஹட்கோ போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தப் பரிவர்த்தனைகள் ரூ.10,860.91 கோடியாக இருந்தது.

முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத்துறை பல ஆண்டுகளாக தொடர்ச்சியான ஈவுத் தொகைக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. 2022-23-ல் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குத் தொகையாக ரூ.59,533 கோடியைப் பெற்றது. இது திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளை விட அதிகமாகும். நடப்பு நிதியாண்டில், 2023 டிசம்பர் 04 நிலவரப்படி, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு ரூ.26,644 கோடி ஈவுத் தொகையாகக் கிடைத்துள்ளது.

இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி, இந்தியக் கப்பல் போக்குவரத்துக்கழகம், பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், இந்திய திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தேசிய கனிம மேம்பாட்டு கழகம் போன்றவற்றின்  பங்குகள் விற்பனையை இந்தத் துறை தொடர்கிறது.   

முதலீடு மற்றும் பொதுச் சொத்து நிர்வாகத்துறையின் சில முக்கிய சாதனைகள் வருமாறு:-

2021 ஜனவரியில் புதிய பொதுத்துறை நிறுவனக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பின், நிஃப்டி 50, பம்பாய் பங்குச் சந்தை ஆகியவை முறையே 44 சதவீதம், 40.29 சதவீதம் என்ற உயர்வு பதிவானது. 2023 நவம்பர் வரை பொதுத்துறை நிறுவனங்களின் தேசியப் பங்குச்சந்தை மற்றும் பம்பாய் பங்குச்சந்தையின் லாபப் பங்கு முறையே 160.49 சதவீதமாகவும், 128.66 சதவீதமாகவும் அதிகரித்தது.

இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கான முதலாவது பொதுப்பங்குகள் 29.11.2023 அன்று பங்குச்சந்தைகளில்  வெற்றிகரமாகப் பட்டியலிடப்பட்டன.

பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை  விற்பனைக்கான சலுகை முறையில் அது தொடர்ந்து விற்பனை செய்கிறது. 2023 ஜனவரி வரை இந்த முறையில் மொத்தம் ரூ.10,860.91 கோடி  மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதில்  எச்ஏஎல் பங்கு ரூ.2,910.39 கோடி, கோல் இந்தியா பங்கு ரூ.4,185.69 கோடி, ஆர்விஎன்எல் பங்கு ரூ.1,365.61 கோடி, எஸ்ஜேவிஎன் பங்கு ரூ.1,349.27 கோடி, ஹட்கோ பங்கு ரூ. 1,049.95 கோடி.

2020-21, 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் ஈவுத்தொகை வரவு முறையே ரூ.39,750 கோடி, ரூ.59,294 கோடி, ரூ.59,533 கோடியாக இருந்தது. இது முறையே ரூ.34,717 கோடி, ரூ.46,000 கோடி, ரூ.43,000 கோடி என்ற திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் 4.12.2023 நிலவரப்படி மத்திய பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஈவுத்தொகை ரூ.26,644 கோடியாகும்.

***

(Release ID: 1990757)

PKV/SMB/AG/KRS



(Release ID: 1992188) Visitor Counter : 49