விவசாயத்துறை அமைச்சகம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற வீரப் புதல்வர்கள் தின வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா பங்கேற்றார்

Posted On: 26 DEC 2023 2:04PM by PIB Chennai

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள குருத்வாரா சாகிப் பாபா தீப் சிங்கில் வீரப் புதல்வர்கள் தினத்தை குறிக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா இன்று பங்கேற்றார்.

1704-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பாபா பதே சிங், ஜோராவர் சிங், 10 வது குரு கோவிந்த்சிங்-ன் புதல்வர்கள் ஆகியோர் சிர்ஹிந்த் முகலாய ஆளுநர் வசீர் கானின் அரசவையில் தூக்கிலிடப்பட்டதை நினைவுகூரும் வகையில் வீரப் புதல்வர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜாம்ஷெட்பூரில் ஷாஹீத் தீப் சிங்கின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட ஒரே குருத்வாரா இதுவாகும்.

சீக்கியர்கள் அநீதி, அழிவுக்கு எதிராகப் போராடுவதில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர், மேலும் பல தலைமுறைகளாக தியாகங்களைச் செய்து வருகின்றனர். மனித குலத்திற்காகவும், நாட்டிற்காகவும் சீக்கிய குருக்கள் செய்த தியாகங்களுக்கு ஈடு இணை யாராலும் முடியாது. தன்னலமற்ற சேவை, அமைதியின் செய்தியை வழங்கும் குரு கிரந்த் சாஹிப், சீக்கிய சமூகத்திற்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு இந்திய சமூகத்திற்கும் உத்வேகத்தின் ஆதாரமாகும்.

***

ANU/PKV/IR/AG/KPG

 



(Release ID: 1990465) Visitor Counter : 62