பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு, மிஷன் கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 25 DEC 2023 4:47PM by PIB Chennai

நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புதுதில்லியில் இன்று நடைபெற்ற விழாவில் மிஷன் கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பைத் தொடங்கி வைத்தார். மை .ஜி,ஓடி., கலப்பு நிரல்கள், க்யூரேட்டட் திட்டங்கள் ஆகியவை .ஜி..டி கர்மயோகி தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று புதிய அம்சங்கள் ஆகும். 12 துறை சார்ந்த திறன் மேம்பாட்டு மின் கற்றல் படிப்புகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சாமானிய மக்களுக்கு சரியான நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கு தொழில்நுட்பத்தை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார். அரசு ஊழியர்கள் டிஜிட்டல் புரட்சியின் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் டிஜிட்டல் ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக தகவல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடுகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், டிஜிட்டல் புரட்சியின் திறனைப் பயன்படுத்தி அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்கர்மயோகி இயக்கம்  அரசு ஊழியர்களை தொழில்நுட்பம் சார்ந்த, புதுமையான, முற்போக்கான மற்றும் வெளிப்படையானவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.  'அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசு' என்பதை பிரதமர் வலியுறுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்நல்லாட்சிக்கான திறவுகோல் தொழில்நுட்பம் எனவும் தொழில்நுட்பம் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது என்றும் அவர் கூறினார். பொறுப்புணர்வு என்பது, நல்ல நிர்வாகத்தின் அடிப்படை அம்சமாகும்" என்று அவர் கூறினார்.

வளர்ச்சியை நோக்கிய, அனைத்தையும் உள்ளடக்கிய, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பயணம்தான் முழு அரசு அணுகுமுறை என்று அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரால் தொடங்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் 'நிர்வாகத்தை எளிதாக்குவதற்கு' வழிவகுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்

அரசுப் பணியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், பெண்கள் அரசின் தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கியுள்ளனர் என்றார். பெண் ஊழியர்களுக்கு 'எளிமையான வாழ்க்கையை' உருவாக்க அரசு தொடர்ச்சியான முன்முயற்சிகளை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களை மையமாகக் கொண்ட, திறமையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்தவும், சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும், முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக மத்திய அரசு 2014-ம் முதல் நாடு தழுவிய 'நல்ல நிர்வாக வாரம் / நாள்கொண்டாடி வருகிறது.

--

ANU/SMB/PLM/KPG

 



(Release ID: 1990308) Visitor Counter : 98