பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிஓபி – 28 ல் தொழில் நிலை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழு நிகழ்வில் பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழ் மொழிபெயர்ப்பு

Posted On: 01 DEC 2023 10:29PM by PIB Chennai

மேதகு தலைவர்களே,

தொழில்துறை தலைவர்களே,

சிறப்பு விருந்தினர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

நாம் அனைவரும், உலகளாவிய நிகர பூஜ்யம் என்ற ஒரு பொதுவான உறுதிப்பாட்டால் இணைக்கப்பட்டுள்ளோம் - உலகளாவிய நிகர பூஜ்யத்தின் இலக்குகளை அடைய அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான கூட்டாண்மை மிகவும் முக்கியமானது.

மேலும், தொழில்துறை கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான வினையூக்கியாகும்.

தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழு, அதாவது லீட்-ஐடி, பூமியின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக அரசுகளுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான கூட்டாண்மையின் வெற்றிகரமான எடுத்துக்காட்டு ஆகும்.

2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட லீட்-ஐடி, தொழில் நிலை மாற்றத்தை வலுப்படுத்துவதற்கான எங்கள் கூட்டு முயற்சியாகும்.

குறைந்த கார்பன் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அது முடிந்தவரை உலகளாவிய தெற்கிற்கு விரைவாகவும் எளிதாகவும் வழங்கப்பட வேண்டும். அதன் முதல் கட்டமாக லீட்-ஐடி,  இரும்பு, எஃகு, சிமெண்ட், அலுமினியம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் நிலை மாற்றத்துக்கான பாதைகளை வகுப்பதில் மற்றும் அறிவுப் பகிர்வில் கவனம் செலுத்தும். இன்றைக்கு இந்தக் குழுவில் 18 நாடுகளும் 20 நிறுவனங்களும் உறுப்பினர்களாக உள்ளன.

நண்பர்களே

ஜி-20 மாநாட்டின் போது சுழற்சி உத்திகளில் உலகளாவிய ஒத்துழைப்பை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இன்று அதை முன்னெடுத்துச் செல்லும் நாங்கள், லீட்-ஐடிக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கிறோம்.

இன்று நாங்கள் லீட்-ஐடி 2.0 ஐ அறிமுகப்படுத்துகிறோம்.

இந்தக் கட்டம் மூன்று முக்கிய மையங்களைக் கொண்டிருக்கும். முதலாவதாக, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான தொழில் நிலை மாற்றம். இரண்டாவதாக, குறைந்த கார்பன் தொழில்நுட்பத்தின் இணை உருவாக்கம் மற்றும் பரிமாற்றம். மூன்றாவதாக, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் தொழில் நிலை மாற்றத்திற்கான நிதி உதவி.

இதையெல்லாம் சாத்தியமாக்க, இந்தியா-ஸ்வீடன் தொழில் மாற்ற தளமும் தொடங்கப்படுகிறது.

இந்தத் தளம் இரு நாடுகளின் அரசுகள், தொழில்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நமது கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக பசுமை வளர்ச்சியின் ஒரு புதிய விவரிப்பை திறம்பட உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.

எனது நண்பரும் என்னுடன் இணைந்து பங்கேற்றுள்ள சுவீடன் பிரதமர் மேதகு உல்ஃப் கிறிஸ்டர்சன் அவர்களுக்கும், இன்றைய நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி.

*******


ANU/PKV/BS/DL


(Release ID: 1990050) Visitor Counter : 93