இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
எனது இளைய பாரதம் என்பதற்கான மை பாரத் இணையதளத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர்
Posted On:
21 DEC 2023 4:38PM by PIB Chennai
மை பாரத் இணையதளத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையுடன் கலந்தாலோசித்து இளைஞர் காவலர் அனுபவ கற்றல் திட்டம் மை பாரத் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அரசின் அனைத்துத் துறைகளிலும் "நமது லட்சியம் வளர்ச்சியடைந்த இந்தியா" உருவாக்குவதற்கும், பங்களிப்பதற்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இளைஞர் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான, தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட அனுசரணையாளராக மை பாரத் கருதப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மை பாரத் இணையதளத்தில் (https://www.mybharat.gov.in/) பதிவு செய்து, அதில் கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகளுக்கு பதிவு செய்யலாம்.
மாநிலங்களவையில் உறுப்பினர் லிங்கையா யாதவ் இன்று எழுப்பிய கேள்விக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 1989199)
ANU/SMB/IR/RS/KRS
(Release ID: 1989360)
Visitor Counter : 117