வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடக்கு கிழக்கு மாணவர்களுக்கான வடகிழக்குக் கவுன்சிலின் கல்வி உதவித் தொகைகள்
Posted On:
21 DEC 2023 2:13PM by PIB Chennai
மத்திய அரசு வடகிழக்கு கவுன்சில் மூலம் வடகிழக்கு பிராந்திய மாணவர்களுக்கு உயர், தொழில்முறை கல்விக்கான உதவித்தொகையை வழங்குகிறது. இந்த உதவித் தொகைகள் தகுதியின் அடிப்படையில் கிடைக்கின்றன. தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றி தகுதித் தேர்வுகளில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல்கள் பெறப்படுகின்றன. பல்வேறு நிலைகளில் தொடர்புடைய பாடங்கள் / படிப்புகளுக்கான தற்போதைய கல்வி உதவித் தொகை விகிதம் பின்வருமாறு:
ஆய்வு நிலை
|
புதிய மற்றும் புதுப்பிக்கும் மாணவர்களுக்கான (தற்போதுள்ள மாணவர்கள்) கல்வி உதவித்தொகை
|
இளநிலைப் பட்டதாரி
|
ஆண்டுக்கு ரூ. 22,000/-
|
முதுநிலைப் பட்டதாரி
|
ஆண்டுக்கு ரூ. 25,000/-
|
எம்.பில்/பி.எச்.டி.
|
ஆண்டுக்கு ரூ. 30,000/-
|
பட்டயம்
|
ஆண்டுக்கு ரூ. 20,000/-
|
2021-22-ம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகைகள் நேரடிப் பயன் பரிமாற்ற இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன, 2020-21-ம் ஆண்டு முதல் 2022-23-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 27,726 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 4756 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்தகவலை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு.பி.எல்.வர்மா இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/SMB/IR/RR/KV
(Release ID: 1989246)
Visitor Counter : 109