பிரதமர் அலுவலகம்
சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
Posted On:
15 DEC 2023 9:54AM by PIB Chennai
சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையும், நாட்டின் ஒற்றுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வும் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டது என்று திரு. மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"மாபெரும் தலைவர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையும், தேசத்தின் ஒற்றுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டன. அவரது முன்மாதிரியான பணி ஒரு வலுவான, மிகவும் ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நம்மை வழிநடத்துகிறது. அவரது வாழ்க்கையில் இருந்து உத்வேகம் பெற்று, வளமான இந்தியா என்ற அவரது கனவை நனவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்”.
***********
(Release ID: 1986531)
ANU/PKV/BS/RR
(Release ID: 1986563)
Visitor Counter : 126
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam