மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தெலங்கானாவில் சம்மக்கா சாரக்கா மத்தியப் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா 2023 மாநிலங்களவையில் நிறைவேறியது

Posted On: 14 DEC 2023 8:46AM by PIB Chennai

தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகுவில் சம்மக்கா சாரக்கா மத்தியப் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக மத்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009-ஐ மேலும் திருத்துவதற்கான மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023 மாநிலங்களவையில் டிசம்பர் 13, 2023 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் இம்மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், தெலுங்கானா மக்களுக்கு அளித்த மற்றொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நனவாக்க வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது, நாட்டில் உயர்கல்வியின் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

பழங்குடி கலை, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு அமைப்புகள் போன்ற பாடங்கள் உட்பட பழங்குடி சமூகங்களிடையே ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும், தரத்தை மேம்படுத்துவதற்கும் இப்பல்கலைக்கழகம் வரும் ஆண்டுகளில் பிராந்திய விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் என்று திரு பிரதான் மேலும் கூறினார். இந்தப் பல்கலைக்கழகம் மாநிலங்களுக்கு அப்பால் உள்ள நமது பழங்குடி சகோதர சகோதரிகளின் முன்னேற்றத்திற்கான முன்னோடியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியில் இடஒதுக்கீடு) சட்டம், 2019, அரசியலமைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்சி / எஸ்டி / ஓபிசி / ஈடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டின் உரிமைகளை  உறுதி செய்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பல்கலைக்கழகம் ரூ.889.07 கோடி செலவில் அமைக்கப்படும். இப்பல்கலைக்கழகத்தில் 11 துறைகளைக் கொண்ட 5 பள்ளிகளின் கீழ் பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் முனைவர் நிலை படிப்புகள் இருக்கும். இந்தப் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தின் முதல் ஏழு ஆண்டுகளில் மொத்தம் 2790 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பணியாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் நிறுவப்படுவதன் மூலம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில்  நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். தவிர, வெளியிடப்பணி/ ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் பல்வேறு சேவைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலம்  மேம்படுத்தப்பட்டு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தெலங்கானாவின் பழங்குடி சமூகங்களைப் பாதுகாக்க அனுப்பப்பட்ட ஆதி பராசக்தியின் வெளிப்பாடுகள் என்று நம்பப்படும் தாய் மற்றும் மகள், சம்மக்கா மற்றும் சரலம்மா (பொதுவாக சாரக்கா என்று அழைக்கப்படுகிறார்கள்) ஆகியோரின் நினைவாக இப்பல்கலைக்கழகத்திற்கு "சம்மக்கா சாரக்கா மத்தியப் பழங்குடிப் பல்கலைக்கழகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

***

ANU/SMB/PKV/RR/KPG

 



(Release ID: 1986153) Visitor Counter : 87