சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் காசநோய் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை

Posted On: 13 DEC 2023 4:07PM by PIB Chennai

நாட்டில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் காசநோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன,

மேலும் மத்தியக் கிடங்குகள் முதல் புறநகர் சுகாதார நிறுவனங்கள் வரை பல்வேறு நிலைகளில் இருப்பு நிலைகள் பற்றி வழக்கமான மதிப்பீடுகள் நடத்தப்படுகின்றன.

மேலும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அவசரகால தேவைகளைப் பூர்த்தி செய்ய, தேவைப்படும்போது வரையறுக்கப்பட்ட அளவுக்கு உள்ளூர் கொள்முதலுக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கான காசநோய் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

***

SMB/IR/RR/KPG


(Release ID: 1985969) Visitor Counter : 73