பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

ஜே.பி.எம் சட்டம், 1987 இன் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான சணல் பேக்கேஜிங் பொருட்களுக்கான ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 08 DEC 2023 8:31PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023 -24 ஆம் ஆண்டிற்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாக உபயோகப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு 2023  டிசம்பர் 8, அன்று ஒப்புதல் அளித்தது.

2023-24 ஆம் ஆண்டிற்கான கட்டாய பேக்கேஜிங் விதிமுறைகள் உணவு தானியங்களில் 100% முழுமையாகவும் மற்றும் சர்க்கரையில் 20% கட்டாயமாக சணல் பைகளில் பேக்கிங் செய்ய வழிவகுக்கிறது.

தற்போதைய முன்மொழிவில் உள்ள ஒதுக்கீடு விதிமுறைகள் இந்தியாவில் சணல் மூலப்பொருட்கள் மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியின் நலனை மேலும் பாதுகாக்கும்,

இதன் மூலம் நாடு தற்சார்பு இந்தியாவுக்கு ஏற்ப தன்னிறைவு அடையும். சணல் பேக்கேஜிங் பொருட்களில் பேக்கேஜிங் செய்வதற்கான ஒதுக்கீடு நாட்டில் (2022-23 ஆம் ஆண்டில்) உற்பத்தி செய்யப்படும் சணல் மூலப்பொருட்களில் சுமார் 65% நுகரப்படுகிறது.

ஜே.பி.எம். சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம், சணல் ஆலைகள் மற்றும் துணை நிறுவனங்களில் பணிபுரியும் 4 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, சுமார் 40 லட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் இந்த அரசு ஆதரிக்கும். மேலும், சணல் இயற்கையானது, மக்கும் தன்மை கொண்டது, புதுப்பிக்கத்தக்கது மற்றும் மறுபயன்பாட்டு நார் என்பதால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இது உதவும், எனவே அனைத்து நிலைத்தன்மை அளவுருக்களையும் பூர்த்தி செய்கிறது.

சணல் தொழில் பொதுவாக இந்தியாவின் தேசிய பொருளாதாரத்திலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இது கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.

ஜே.பி.எம் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு விதிமுறைகள் சணல் துறையில் 4 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் 40 லட்சம் விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகின்றன. ஜே.பி.எம் சட்டம், 1987 சணல் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சணல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நபர்களின் நலனைப் பாதுகாக்கிறது.

சணல் தொழிலின் மொத்த உற்பத்தியில் 75% சணல் சாக்கு பைகள் ஆகும், இதில் 85% இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில கொள்முதல் முகமைகளுக்கு வழங்கப்படுகிறது, மீதமுள்ளவை நேரடியாக ஏற்றுமதியும் விற்பனையும் செய்யப்படுகின்றன.

உணவு தானியங்களை பேக்கிங் செய்வதற்காக இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.12,000 கோடி மதிப்புள்ள சணல் பைகளை வாங்குகிறது, இதனால் சணல் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் விளைபொருட்களுக்கு உத்தரவாதமான சந்தை உறுதி செய்யப்படுகிறது.

சணல் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சணல் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு சணல் பைகளின் சராசரி உற்பத்தி சுமார் 30 இலட்சம் பேல்கள் (9 இலட்சம் மெட்ரிக் டன்) ஆகும். சணல் பைகளின் உற்பத்தியை அதிகரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

----------


ANU/AD/BS/DL


(Release ID: 1984637) Visitor Counter : 82