நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை

நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு

அனைத்து முக்கிய விவகாரங்களும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 02 DEC 2023 5:16PM by PIB Chennai

2023 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் அவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம் இன்று (02.12.2023) நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி தமது தொடக்க உரையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் 2023 டிசம்பர் 4 ஆம் தேதி திங்களன்று தொடங்கும் என்றும், கூட்டத்தொடர் 2023 டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை முடிவடையும் என்றும் தெரிவித்தார். இந்த கூட்டத்தொடர் 19 நாட்களுக்கு 15 அமர்வுகளைக் கொண்டதாக அமையும் என்று அவர் கூறினார். இந்த கூட்டத்தொடரில் உத்தேசமாக 19 சட்ட மசோதாக்கள் மற்றும் 2 நிதி மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடைமுறை விதிகளின் கீழ் எந்தவொரு பிரச்சினையையும் அவையில் விவாதிக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மேலும் கூறினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சருமான அர்ஜூன் ராம் மேக்வாலும் பங்கேற்றார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கேட்ட பின்னர் பேசிய, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அரசியல் கட்சிகள் கூறிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தின் விதிகளின்படி விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

மொத்தம் 23 கட்சிகளைச் சேர்ந்த 30 தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

17-வது மக்களவையின் 14-வது கூட்டத்தொடரிலும், மாநிலங்களவையின் 262-வது கூட்டத்தொடரிலும் விவாதிக்கப்படும் மசோதாக்களின் பட்டியல்

I – சட்ட மசோதா அலுவல்கள்:

1.        ரத்து மற்றும் திருத்த மசோதா- 2023, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டது

2.        வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா - 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது

3.        பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா - 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

4.        அரசியலமைப்பு (ஜம்மு காஷ்மீர்) பட்டியல் சாதிகள் உத்தரவு (திருத்தம்) மசோதா - 2023

5.        அரசியலமைப்பு (ஜம்மு-காஷ்மீர்) பட்டியல் பழங்குடியினர் ஆணை (திருத்தம்) மசோதா -  2023

6.        ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா - 2023

7.        ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா - 2023

8.        பாரதிய நியாய சன்ஹிதா – 2023 எனப்படும் இந்திய நீதித்துறை சட்ட மசோதா - 2023

9.        பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023 எனப்படும் இந்திய குடிமைப் பாதுகாப்புச் சட்ட மசோதா

10.      பாரதிய சாக்ஷய அதினியம், 2023 எனப்படும் இந்திய சாட்சியச் சட்ட மசோதா

11.      தபால் அலுவலக மசோதா - 2023

12.      தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா - 2023

13.      கொதிகலன்கள் மசோதா - 2023

14.      இடைக்கால வரி வசூல் மசோதா - 2023

15.      மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (இரண்டாவது திருத்தம்) மசோதா - 2023

16.      ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா -  2023

17.      யூனியன் பிரதேசங்களின் அரசு (திருத்த) மசோதா -  2023

18.      டெல்லியின் தேசிய தலைநகரப் பகுதி சட்டங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) இரண்டாவது (திருத்த) மசோதா - 2023

19.      மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா - 2023

II – நிதி மசோதா நடைமுறைகள்:-

1.        2023-24 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கைகளின் முதல் தொகுதி சமர்ப்பித்தல், விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்

2.        2020-21 ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல், விவாதித்தல் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துதல், பரிசீலனை செய்தல் மற்றும் நிறைவேற்றுதல்.

*******

ANU/AD/PLM/DL


(Release ID: 1981962) Visitor Counter : 246