பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு சுனில் ஓஜா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 29 NOV 2023 10:24PM by PIB Chennai

பாவ்நகர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சுனில் ஓஜா மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

பிஜேபிக்கும், சமூக சேவைத் துறைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். வாரணாசியில் அவர் ஆற்றிய பாராட்டத்தக்க பணியையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

 

பாவ்நகர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுனில்பாய் ஓஜாவின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

 

பிஜேபியின் அமைப்பு அளவிலும், சமூக சேவைத் துறையிலும் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். வாரணாசியிலும் சுனில்பாயின் பணி பாராட்டத்தக்கது.

 

அவரது ஆன்மா சாந்தியடையட்டும், இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியைக் குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்...

ஓம் சாந்தி... !!"

*********


(Release ID: 1980985)

ANU/SMB/IR/RR/KPG


(रिलीज़ आईडी: 1981005) आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam