பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிந்துதுர்கில் இந்தியக் கடற்படையின் செயல் விளக்கம் 2023

Posted On: 29 NOV 2023 3:35PM by PIB Chennai

நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற சிந்துதுர்க் கோட்டையில் கப்பல்கள், விமானங்கள் மூலமான கடற்படை செயல் விளக்கம்' 2023, டிசம்பர் 04  அன்று நடைபெற உள்ளது.

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வை தார்கர்லி கடற்கரையில் இருந்து மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், ராணுவப் பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுகளிக்க உள்ளனர். இந்த நிகழ்வு நமது வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டாடுவதையும், பெருமைப்படுத்துவதையும் காலனித்துவ நடைமுறைகளைக் கைவிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜால் 1660-ம் ஆண்டில் கட்டப்பட்ட சிந்துதுர்க் கோட்டை இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைப் பெருமைப்படுத்துகிறது.

1971-ம் ஆண்டு போரின் போது கராச்சித் துறைமுகத்தின் மீது கடற்படை நடத்திய "ஆபரேஷன் ட்ரைடென்ட்" தாக்குதலை நினைவுகூரும் வகையில் இந்தியக் கடற்படை டிசம்பர் 04 அன்று கடற்படை தினத்தைக் கொண்டாடுகிறது. பணியாளர்களின் வீரம், துணிச்சல் மற்றும் பாதகமான சூழ்நிலைகளில் சாத்தியமற்றதை அடைவதற்கான அவர்களின் உறுதியைக் கொண்டாடும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியக் கடற்படையின் அதிநவீன கப்பல்கள், விமானங்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் பொதுமக்களுக்கும் ஆன்லைன் பார்வையாளர்களுக்கும் காட்சிப்படுத்தப்படும்.   

இந்த நிகழ்வில் 20 போர்க்கப்பல்கள், மிக் 29 கே, எல்.சி.ஏ கடற்படை உள்ளிட்ட 40 விமானங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் இந்தியக் கடற்படையின் கடல்சார் கமாண்டோக்களின் கடற்கரை கண்காணிப்பு மற்றும் தாக்குதல் செயல்விளக்கம் ஆகியவை முக்கிய ஈர்ப்பாக இருக்கும்.

***


ANU/SMB/IR/RR/KPG


(Release ID: 1980905) Visitor Counter : 116