மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 29 NOV 2023 2:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ. 24,104 கோடி மதிப்பிலான (மத்திய அரசின் பங்கு: ரூ.15,336 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு: ரூ. 8,768 கோடி) குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2023-24-ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்பட்டபடி, "குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம்  தொடங்கப்படும். இது வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், சுகாதாரம், மேம்பட்ட கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை வழங்கும்.  பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 10.45 கோடி பழங்குடியினர் உள்ளனர், இதில் 18 மாநிலங்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 75 சமூகங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

***

ANU/SMB/IR/RR/KPG


(Release ID: 1980806) Visitor Counter : 177