பிரதமர் அலுவலகம்
மூத்த குஜராத்தி புகைப்பட பத்திரிகையாளர் ஜவேரிலால் மேத்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
27 NOV 2023 10:23PM by PIB Chennai
மூத்த குஜராத்தி புகைப்பட பத்திரிகையாளர் திரு ஜவேரிலால் மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
புகைப்பட இதழியல் துறையில் அவர் ஆற்றிய நீண்டகால மற்றும் தனித்துவமான பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"குஜராத்தைச் சேர்ந்த பிரபல புகைப்பட பத்திரிகையாளர் ஜவேரிலால் மேத்தாவின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
நாளிதழ் உலகில் தமது நீண்டகால பணியின் போது புகைப்பட இதழியல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ஓம் சாந்தி...!!"
***
(Release ID: 1980266)
ANU/PKV/BR/RR
(रिलीज़ आईडी: 1980286)
आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam